யுகோசிலாவியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{underconstruction}} {{Infobox military conflict | conflict = யு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 31:
'''யுகோசிலாவியப் படையெடுப்பு''' (''Invasion of Yugoslavia'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[அச்சு நாடுகள்]] [[யூகோசிலாவியா|யூகோசிலாவிய]] நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. [[பால்கன் போர்த்தொடர்| பால்கன் போர்த்தொடரின்]] ஒரு பகுதியான இது '''ஏப்ரல் போர்''' (''April war'') என்றும் '''நடவடிக்கை 25''' (''Unternehmen 25'') அழைக்கப்படுகிறது.
 
1940ல் அச்சு நாடுகளில் ஒன்றான [[இத்தாலி]] [[கிரீசு]] மீது [[கிரேக்க-இத்தாலியப் போர்|படையெடுத்தது]]. ஆனால் கிரேக்கப்படைகளின் கடுமையான எதிர்ப்பை அதனால் சமாளிக்க முடியவில்லை. இத்தாலிய சர்வாதிகாரி [[முசோலினி]] தனக்கு உதவுமாறு [[நாசி ஜெர்மனி]]யின் சர்வாதிகாரி [[இட்லர்|இட்லரிடம்]] முறையிட்டார். இத்தாலிக்குத் துணையாக [[பால்கன் குடா]] பகுதியில் தலையிட இட்லர் முடிவு செய்தார். மேலும் கிரீசிலுள்ள வானூர்தி ஓடுதளங்களில் இருந்து நேச நாட்டு வான்படைகள் [[ரொமேனியா]] நாட்டு எண்ணெய்க் கிணறுகளைத் தாக்கும் சாத்தியக் கூறு இருந்தது. அந்த எண்ணெய்க் கிணறுகளில் இருந்து தான் ஜெர்மனியின் போர்த் தேவைகளுக்கான எரிபொருள் கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே அவற்றைப் பாதுகாக்க கிரீசைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜெர்மானியர்கள் விரும்பினர். கிரீசுக்கு வடகே உள்ள நாடுகளில் ரொமேனியா, [[பல்கேரியா]], [[அங்கேரி]] முன்னரே அச்சு நாட்டுக் கூட்டணியில் இணைந்து விட்டன. ஆனால் யுகோசிலாவியா மட்டும் தொடக்கத்தில் அவற்றுடன் இணைய மறுத்து வந்தது. ஜெர்மானிய வற்புறுத்தலால், மார்ச் 25, 1941 ல் யுகோசிலாவியின் அரசாட்சி பொறுப்பிலிருந்த இளவரசர் இரண்டாம் பால் ஒப்புக் கொண்டார். இதனை எதிர்த்த யுகோசிலாவிய இராணுவத்தினர் ஒரு புரட்சி ஒன்றை நடத்தி அவரைப் பதவியிலிருந்து இறக்கினர். இப்புரட்சியால் கோபம் கொண்ட இட்லர் யுகோசிலாவியா மீது படையெடுக்க முடிவு செய்தார்.
 
ஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் [[கிரீசு சண்டை|கிரீசு]] மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. இத்தாக்குதலில் இத்தாலிய மற்றும் அங்கேரியப் படைப்பிரிவுகளும் பங்கேற்றன. திடீரென நிகழ்ந்த இத்தாக்குதலாலும், யுகோசிலாவிய மக்களிடையே ஜெர்மனியை எதிர்ப்பது குறித்து செர்பிய-குரோஷிய இனக்குழுக்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவியதாலும், யுகோசிலாவியப் படைகள் நிலைகுலைந்தன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யுகோசிலாவியப்_படையெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது