நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: is:Blágerlar
வரிசை 15:
இவை விவசாயத்திலும், மனித மற்றும் உணவுகளிலும் இடம் பிடிக்கின்றன. விவசாயத்தில் இவை நைத்ரசன் உற்பத்தியில் ஈடுபடுவதால் இவை நில பண்படுதலில் சிறப்பு பெறுகின்றன. ''அனபெனா அசோல்லே'' என்பவை [[அசோல்லா]] எனப்படும் நீர்வாழ் குறுந்தாவரத்திடம் இயற்கையாக ஒன்றியவாழ்வு வாழ்கின்றன. அப்போது அது காற்றிலிருந்து நைத்ரசனை நிலைப்படுத்துகின்றன. இதனை நிலத்தில் இடும்போது நிலம் செப்பனிடப்படுகின்றன. அதேப்போல் ''நாச்டாக்'' மற்றும் ஏனைய ''அனெபெனா'' பேரினத்தை சார்ந்தவைகளும் இந்நைத்ரசனை நிலைப்படுத்துகின்றன.
 
''[[ஸ்பைருலினா (ஊட்ட உணவு)|ச்பைருலினா]]'' மற்றும் ''அர்த்ரோச்பைரா'' என்பன மனித உணவாகவும் விலங்கின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை 70% சதவிகிதத்திற்கும் மிகுதியாக புரதத்தைக் கொண்டுள்ளன. இவை சில மருத்துவ பண்புகளான சோகை நீக்குதல், நோய் எதிர்ப்பு வலிமை, மற்றும் வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இவை கடைகளில் மாத்திரை வடிவிலும் பொடியாகவும் கிடைக்கிறது.
 
இச்சயனோபாக்டீரியாக்களானது, தனிப்பயன்களல்லாது காற்று மாசு குறைப்பு, கரியமில வாயு உட்கொண்டு புவிவெப்பமடைதல் கட்டுப்பாடு, பல மீன்களின் உணவு, உணவு சுழற்சியில் மிக முக்கிய அடித்தட்ட உற்பத்தியாளர், நச்சுலோகங்களை தன்மை மாற்றி பயனுள்ளதாக மாற்றல் போன்ற சிறப்பியல்புகள் பெற்றவை.
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது