இந்திய பதிப்புரிமைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இந்தியாவில் சட்டம்" (using HotCat)
சி தானியங்கிமாற்றல்: en:Copyright law of India; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
1941-இல் முதன் முதலில் பதிப்புரிமைச் சட்டம் செயல்படுத்தப்பெற்றது. இப்பொழுது நடைமுறையிலிருப்பது, திருந்திய முறையில் [[இந்திய நாடாளுமன்றம்]] 1957இல் நிறைவேற்றிய பதிப்புரிமைச் சட்டம்.
 
== சட்ட விளக்கம் ==
ஒன்றின் பதிப்புரிமை ஒருவருக்கு இருக்க வேண்டுமானால் அது முழுக்க அவரது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மற்றொன்றைப் பார்த்துப் படைத்த ஒன்றுக்கு ஒருவர் உரிமை கொண்டாட இயலாது. கருத்துக்களுக்கோ, ஒருவரும் உரிமை கொண்டாட இயலாது. ஏனென்றால் அவை எல்லாம் பொதுச் சொத்துக்களாகும். ஒரு அதற்குப் பதிப்புரிமை கிடைக்கின்றது.
 
இந்தச் சட்டத்தின் 45ஆம் பிரிவு பதிப்புரிமையைப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளிக்கின்றது. ஆனால் பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இலக்கிய படைப்புகள், இசை, நாடகம் போன்றவற்றுக்குப் பதிப்புரிமை படைப்பாளியின் வாழ்நாள் முழுவதும் அவருக்கே சொந்தமாக இருக்கும். அவர் காலத்திற்குப் பின்பு அறுபதாண்டுகளுக்குப் பதிப்புரிமை அவரது சந்ததியினருக்கு உண்டு. புகைப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு பதிப்புரிமை வேளியாகி அறுபதாண்டுகளுக்குப் பின்பு காலாவதியாகிறது. அதன் பின்னர் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம்.
 
== விதிவிலக்குகள் ==
இச்சட்டத்தின்படி ஒருவரின் படைப்பிலிருந்து ஆய்வுக்காகவோ, தனிப்பட்ட படிப்புக்காகவோ, மதிப்பீட்டிற்காகவோ சில பகுதிகளை எடுத்துப்பயன்படுத்துவது குற்றமாகாது. நியாயமான முறையில் மேற்கோள்காட்டவோ சரியான முறையில் சுருக்கத்தைக் கூறவோ சட்டம் வாய்ப்பளிக்கின்றது. ஒருவரின் படைப்பிலிருந்து சிலவற்றைப் பயன்படுத்தும் பொழுது மூலத்தைக் குறிப்பிட வேண்டும்.
 
செய்தித்தாட்களுக்குச் சிறப்பு விதி விலக்குகள் வழங்கப் பெற்றுள்ளன. இதழ்கள் பொது நலன் கருதி, எந்த இலக்கியப் படைப்பையும், நாடகத்தையும், இசையையும் வெளியிடலாம், இது நடப்புச் செய்திகளை வெளியிடும் வகையில் சேரும். ஆனால் இதழில் வெளியான கட்டுரையை, அப்படியே சொல் மாறாமல் வெளியிட வேண்டுமானால் அந்த இதழின் அனுமதி பெற வேண்டும்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://copyright.gov.in/Documents/CopyrightRules1957.pdf 1957 சட்டத்தின் உரை]
 
 
[[பகுப்பு:பதிப்புரிமை]]
[[பகுப்பு:இந்தியாவில் சட்டம்]]
 
[[en:Indian copyrightCopyright law of India]]
[[ml:പകർപ്പവകാശ നിയമം, 1957 (ഇന്ത്യ)]]
[[sv:Upphovsrätt i Indien]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_பதிப்புரிமைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது