உலா (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "தமிழ் இலக்கியம்"; Quick-adding category "உலா (இலக்கியம்)" (using HotCat)
No edit summary
வரிசை 1:
தமிழ் இலக்கியத்தில் '''உலா''' என்பது [[பிரபந்தம்]] எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். [[யானை]], [[குதிரை]], [[தேர்]] போன்றவற்றில் ஏறி, [[இசைக் கருவி]]களை இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அல்லது அரசனோ இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்திலும்]], [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களிலும்]] கூட உலா பற்றிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலா என்பது ஒரு தனி இலக்கிய வகையாக உருவானது பிற்காலத்திலேயே ஆகும். பிற்காலத்துப் [[பாட்டியல்]] நூல்கள் உலா இலக்கியத்துக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் [[கலிவெண்பா]]ப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இந் நூல்கள் கூறும் இலக்கணம் ஆகும்<ref>நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 45 ஆம் பாடல்</ref>.
 
==உலாவின் பகுதிகள்==
;முன்னிலை
உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் இவற்றைக் கூறும் பகுதி முன்னிலை எனப்படும்.
 
;பின்னெழுநிலை
இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் கூறுவன பின்னெழுநிலை எனப்படும்.
 
 
==உலா இலக்கியங்கள் சில==
# [[திருக்கயிலாய ஞான உலா]] - [[சேரமான் பெருமாள் நாயனார்]], [[கிபி]] [[9ம் நூற்றாண்டு]], இதுவே முதலாவது உலா இலக்கியம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆதி உலா எனவும் வழங்குவர்<ref name="poologasingam">[[பொன். பூலோகசிங்கம்]], உலாப் பிரபந்த வளர்ச்சி, கலைப்பூங்கா, ஏப்ரல் 1963</ref>.
* [[ஆதி உலா]]
*# [[இராசராசவிக்கிரம சோழன் உலா]] - ஒட்டக்கூத்தர்
* [[திருக்கயிலாய ஞான உலா]] - சேரமான் பெருமாள் நாயனார்
*# [[விக்கிரமகுலோத்துங்க சோழன் உலா]] - ஒட்டக்கூத்தர்
*# [[குலோத்துங்கஇராசராச சோழன் உலா]] - ஒட்டக்கூத்தர்
*# [[ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை]] - [[நம்பியாண்டார் நம்பிகள்நம்பி]]
* [[இராசராச சோழன் உலா]] - ஒட்டக்கூத்தர்
*# [[ஏகம்பநாதருலா]]
* [[ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை]] - நம்பியாண்டார் நம்பிகள்
*# [[திருக்குற்றால நாதருலா]]
* [[ஏகம்பநாதருலா]]
* [[திருக்குற்றால நாதருலா]]
 
==குறிப்புகள்==
<references/>
 
==உசாத்துணைகள்==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
வரி 19 ⟶ 27:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]
 
 
 
[[பகுப்பு:உலா (இலக்கியம்)]]
"https://ta.wikipedia.org/wiki/உலா_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது