யுகோசிலாவியப் போர்முனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 26:
 
'''யுகோசிலாவியப் போர்முனை''' (''Yugoslav Front'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளால்]] ஆக்கிரமிக்கப்பட்ட [[யுகோசிலாவியா]]வில், அச்சு படைகள் மற்றும் அவர்களது உள்நாட்டு ஆதரவாளர்களுக்கும் யுகோசிலாவிய எதிர்ப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களைக் குறிக்கிறது. [[1941]] - [[1945]] காலகட்டத்தில் நிகழ்ந்த இப்போர்த்தொடர், [[நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களம்|நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின்]] ஒரு பகுதியாகும். இது யுகோசிலாவிய தேசிய விடுதலைப் போர் என்றும் அழைக்கப்படுகிறது.
 
இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகள் கூட்டணியில் சேரும்படி நாசி ஜெர்மனி யுகோசிலாவியாவை வற்புறுத்தியது. இதற்கு இசைய மறுத்ததால் ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6, 1941 அன்று யுகோசிலியாவைத் [[யுகோசிலாவியப் படையெடுப்பு|தாக்கின]]. ஏப்ரல் 17ம் தேதி யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, [[இத்தாலி]], [[அங்கேரி]], மற்றும் [[பல்கேரிய|பல்கேரியா]] நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. யுகோசிலாவியர்களுள் [[குரோவோசியா]] ஜெர்மனியின் ஆதரவாளர்களாக இருந்தனர். ஜெர்மனியின் துணையுடன் குரோவாசியா தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பிற யுகோசிலாவியர்கள் [[நேச நாடுகள்|நேச நாடுகளின்]] துணையுடன் அச்சு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) இப்போர் தொடர்ந்து நீடித்தது.
 
ஜெர்மானியர்களை எதிர்த்த உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தில் முதலில் இரு பிரிவுகள் இருந்தன - யுகோசிலாவிய அரச குடும்பத்தை ஆதரித்த செட்னிக்குகள் மற்றும் [[ஜோசப் புரோஸ் டிட்டோ]] தலைமையிலான கம்யூனிஸ்டுகள். 1941-42 காலகட்டத்தில் ஜெர்மானியர்களை எதிர்த்த செட்னிக்குகள் பின்பு அவர்களுடன் ஒத்துழைக்கத் தொடங்கி தங்கள் எதிர்ப்பினைக் கைவிட்டனர். ஆனால் டிட்டோவின் கம்யூனிசப் படைகள் தொடர்ந்து ஜெர்மானியர்களை எதிர்த்து வந்தன. அவற்றுக்கு [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] மேற்கத்திய நேச நாடுகளும் உதவி செய்தன. இதனால் இரு எதிர்ப்பு குழுக்களுமிடையே ஒரு உள்நாட்டுப் போரும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/யுகோசிலாவியப்_போர்முனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது