வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
[[File:Superpower map 1945.png|240px|thumb|1945 ஆம் ஆண்டின் உலகப் படம். வில்லியம் டி. ஆர். பாக்சு (William T.R. Fox) குறிப்பிட்டபடி, [[ஐக்கிய அமெரிக்கா]] (நீலம்), [[சோவியத் ஒன்றியம்]] (சிவப்பு), [[பிரித்தானியப் பேரரசு]] (நீலப்பச்சை) என்பன வல்லரசுகள்.]]
"வல்லரசு" என்னும் தமிழ்ச் சொல், "சூப்பர் பவர்" (Superpower) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுகிறது. மேற்குறித்த ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவை முழுமையாகத் தமிழில் குறிக்கும் ஒரு சொல்லாகவே இது பயன்பட்டு வருகிறது. எனவே "வல்லரசு" என்னும் சொல் குறிக்கும் கருத்துருவின் வளர்ச்சியை அதற்கு இணையான ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவின் வளர்ச்சியூடாகக் காண்பது பொருத்தமானது.
 
 
1944 ஆம் ஆண்டிலேயே ஆற்றல் வாய்ந்த நாடுகளிலும் கூடிய ஆற்றல் வாய்ந்த நாடுகளைக் குறிக்கும் ஒரு சொல்லாக "வல்லரசு" என்பதற்கு இணையான "சூப்பர் பவர்" என்னும் ஆங்கிலச்சொல் பயன்பட்டது. எனினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே பிரித்தானியப் பேரரசு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றைக் குறிப்பாக விளக்கும் ஒரு சொல்லாக வழங்கத் தொடங்கியது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலக அரசியலில் செல்வக்குச் செலுத்தவல்ல நிலையில் இருந்ததனாலேயே இந்நாடுகளும் வல்லரசு என்னும் வரையறைக்குள் வந்தன. அக் காலத்துக்கு முந்திய பேரரசுகளையும் உள்ளடக்கும் வகையில் [[பண்டைய எகிப்து]], [[பண்டைய கிரீசு]], [[பண்டைய சீனா]], [[பண்டைய இந்தியா]], [[பாரசீகப் பேரரசு]], [[ஓட்டோமான் பேரரசு]], [[மங்கோலியப் பேரரசு]], [[போத்துக்கீசப் பேரரசு]], [[எசுப்பானியப் பேரரசு]], [[பிரான்சு]], [[ஒல்லாந்துக் குடியரசு]] என்பவற்றையும் வல்லரசு என்னும் சொல்லால் குறிக்கச் சிலர் முற்பட்டனர். வரலாற்றில் இவையும் சில தனித்துவமான பெருமைகளைக் கொண்டிருந்ததே வரலாற்றாளர்கள் இவற்றுக்கும் வல்லரசு நிலை கொடுக்க முற்பட்டதற்கான காரணங்கள் எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது