கிளைமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: nl:M18A1 Claymore Antipersoneelsmijn
சி தானியங்கிமாற்றல்: en:M18 Claymore mine; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''கிளைமோர்''' (''M18A1 Claymore Antipersonnel Mine'') என்பது மனித இலக்குகளைத் தாக்கப் பயன்படும் '''[[கண்ணிவெடி]]''' வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதனை [[நோர்மன் மாக்கிளியோட்]] என்பவர் கண்டறிந்தார். இது மறைந்திருந்து படைவீரர்களை தாக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும் சிறு வாகனங்களை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 
== செயற்பாட்டு நுட்பம் ==
வரிசை 17:
ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைமோர்களை வெடிக்க வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதுண்டு. நேரடியாக ஒவ்வொரு கிளைமோருக்கும் ஒரேநேரத்தில் மின்சாரம் வழங்கியோ அல்லது ஒரு கிளைமோருக்கு மட்டும் மின்சாரம் வழங்கி ஏனைய கிளைமோர்களை [[வெடிப்பதிர்வு கடத்தி]](Detonating cord) மூலம் இணைத்தோ தாக்குதல் நடத்தப்படுகிறது.
 
== வெடிக்க வைக்கும் முறைகள் ==
[[படிமம்:MRUD.JPEG|thumb|right|கிளைமோர்]]
கிளைமோரை வெடிக்க வைப்பதற்கு கெற்பு (Detonator) பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான கிளைமோர்களில் இரு கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இது வெடித்தலின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக மட்டுமன்றி, சீரான வெடித்தலை உறுதிப்படுத்தவும் அதன் விளைவாக சிதறுதுண்டுகளைச் சரியாக வழிநடத்தவும் இரு கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கெற்பு வெடித்து கிளைமோரிலுள்ள உயர்சக்தி வெடிமருந்தின் வெடித்தலைத் தொடக்கி வைக்கிறது.
வரிசை 36:
[[படிமம்:Bus under clymore attack.jpg |right|thumb|க்ளைமோரால் தாக்கப்பட்ட பேருந்து ஒன்று. வெடித்து தெறித்த சன்னங்கள் ஏற்படுத்திய துளைகளை கவனிக்கவும்]]
 
== வெவ்வேறு நாடுகள் தயாரிக்கும் கிளைமோர்களின் பெயர்கள் ==
 
=== அமெரிக்க ஐக்கிய நாடுகள் ===
* M18A1
 
=== சோவியத் ஒன்றியம் ===
* MON-50
* MON-90
* MON-100
* MON-200
 
=== இஸ்ரேல் ===
* No. 6
 
=== பிரான்ஸ் ===
* MAPED F1
 
=== தென்னாபிரிக்கா ===
* Mini MS-803
 
=== பாகிஸ்தான் ===
* P5MK1, P5MK2
 
=== இலங்கை ===
இலங்கையில் போரிடும் இருதரப்புமே கிளைமோர்க் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துகின்றன. இலங்கை இராணுவம் தொன்னூறுகளின் நடுப்பகுதியில்தான் கிளைமோர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும் விடுதலைப்புலிகள் அதற்கு முன்பிருந்தே அதிகளவில் கிளைமோர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
 
==== இலங்கை இராணுவம் பயன்படுத்துபவை ====
* M18A1 (அமெரிக்கா)
* P5MK1(பாகிஸ்தான்)
பிற்காலத்தில் அதிகளவு தாக்குதிறனைப் பெறுவதற்காகவும் சில சிறப்புத் தேவைகளுக்காகவும் இலங்கை இராணுவம் சொந்தமாக சில கிளைமோர்களை உற்பத்தி செய்திருந்தது.
 
==== விடுதலைப் புலிகள் பயன்படுத்துபவை ====
விடுதலைப் புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்திலிருந்து கிளைமோர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். [[இலங்கை]]யில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்படுகின்றன.
 
வரிசை 74:
* இராகவன். இது வழமையான கிளைமோர்கள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையிலும் சிதறுதுண்டுகளை ஏவி பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.
* கட்டுப்பாடற்ற தாக்குதல் வகைக்குரியதாக விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் 'சாந்த குமாரி'. இது விடுதலைப்புலிகளின் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் பலியான லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாகத் தயாரிக்கப்பட்டது. இடறுகம்பிப் பொறிமுறையுடன் கூடியதாக இக்கிளைமோர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
 
 
 
[[பகுப்பு:பொறி வெடிகள்]]
வரி 81 ⟶ 79:
[[cs:Claymore (mina)]]
[[de:M18 Claymore]]
[[en:M18 Claymore anti-personnel mine]]
[[es:M18 Claymore]]
[[fi:Claymore-miina]]
"https://ta.wikipedia.org/wiki/கிளைமோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது