மாற்கு நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sk:Evanjelium podľa Marka
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: eu:Markoren Ebanjelioa; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 8:

== நூலின் ஆசிரியரும் நூல் எழுந்த பின்னணியும் ==

வரிசை 38:

== மாற்கு நற்செய்திக்கு ஆதாரங்கள் ==

மாற்கு நற்செய்தி உருவாவதற்கு முன்னரே இயேசு பற்றிய வலுவான ஒரு மரபு வழக்கு இருந்தது. அந்த மரபிலிருந்து மாற்கு பல கருத்துத் தொடர்களைப் பெற்றார். இயேசு மக்களுக்கு ஞானம் போதித்த ஆசிரியர், வல்லமையோடு [[இயேசுவின் புதுமைகள்|புதுமைகள்]] பல செய்த செயல்வீரர், இயேசுவின் சிறப்புப் பெயர்கள் மானிட மகன், தாவீதின் மகன், கடவுளின்; மகன், மெசியா, ஆண்டவர் போன்றவை - இவை மாற்குவுக்கு மரபிலிருந்து கிடைத்தவை ஆகும்.
வரிசை 49:

== மாற்கு கூறும் இயேசுவின் கதை ==

நூலின் தொடக்கத்திலேயே இயேசு பற்றிய மையச் செய்தியை மாற்கு வாசகர்களுக்குத் தருகிறார் (காண்க மாற் 1:1-13). இப்பகுதியில், இயேசு திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எனவும், இயேசு உண்மையிலேயே '''கடவுளின் மகன்''' எனவும், அவர் சாத்தானின் சோதனையை முறியடித்து வெற்றிவாகை சூடினார் எனவும் மாற்கு தெளிவுபடுத்துகிறார்.

நற்செய்தியின் கதைக் கருவையும் அமைப்பையும் கதையின் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து ஓர் உச்சக்கட்டத்தை எட்டுவதையும் படிப்படியாக மாற்கு புவியியல் மற்றும் இறையியல் அடிப்படையில் விளக்குகிறார்.

கீழே மாற்கு நற்செய்தியின் இரு பெரும் பிரிவுகள் விளக்கப்படுகின்றன.

== மாற்கு நற்செய்தியின் முதல் பிரிவு ==

மாற்கு நற்செய்தியின் முதல் பிரிவில் (மாற் 1:14-8:21) இயேசுவின் வாழ்வோடு இணைந்து கலிலேயாவில் நடக்கும் நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இப்பிரிவின் '''முதல் அலகு''' மாற்கு 1:14-3:6 ஆகும். அங்கே இயேசு முதல் சீடர்களை அழைக்கிறார் (மாற் 1:16-20); வலிமை வாய்ந்த விதத்தில் மக்களுக்குக் [[இயேசுவின் புதுமைகள்|குணமளிக்கிறார்]]; ஞானத்தோடு மக்களுக்குப் போதிக்கிறார்; எதிரிகள் விரிக்கும் வலையில் விழாமல் அவர்களை முறியடிக்கிறார் (மாற் 1:21-3:6).

வரிசை 71:

== மாற்கு நற்செய்தியின் இரண்டாம் பிரிவு ==

மாற்கு விவரிக்கும் இயேசு கதையின் இரண்டாம் பெரும் பிரிவு 8:22இலிருந்து தொடங்கி 16:8ல் முடிகிறது. இப்பிரிவின் '''முதல் அலகு''' (மாற் 8:22-10:52) இயேசு தம் சீடரோடு எருசலேமை நோக்கிப் பயணம் செல்வதை விவரிக்கிறது. அப்போது இயேசு சீடர்களுக்குத் தாம் யார் என்பது பற்றி அறிவுறுத்துகிறார். அவரைப் பின் செல்வதற்கான நிபந்தனைகளை விளக்குகிறார். இந்த அலகின் தொடக்கத்திலும் (மாற் 8:22-26) இறுதியிலும் (10:46-52) இயேசு பார்வையற்றோருக்குப் பார்வையளிக்கும் செயல் விவரிக்கப்படுகிறது. இதில் நிச்சயமாக ஓர் உட்பொருள் இருக்கிறது. அதாவது, இயேசுவின் சீடர்கள் பார்வையற்றோர்போல இருந்தார்கள்; இயேசு யார் என்பதை அவர்களது அகக் கண்கள் காணத் தவறிவிட்டிருந்தன. இயேசு படிப்படியாக அவர்களுடைய கண்களைத் திறக்கின்றார்.

இயேசு பார்வையளிக்கும் இரு நிகழ்ச்சிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் மூன்று சிறு பிரிவுகள் உள்ளன (மாற் 8:27-9:29; 9:30-10:31; 10:32-45). இங்கு இயேசு தாம் பாடுபட்டு இறக்கப்போவதை முன்னறிவிக்கிறார்; ஆனால், சீடர்களோ இயேசுவின் சொற்களைப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு, தாம் யார் என்பதையும், தம்மைப் பின்செல்ல விரும்புவோர் துன்பப்படத் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் சீடருக்கு விளக்கிச் சொல்கின்றார்.

இரண்டாம் பிரிவின் '''இரண்டாம் அலகு''' (11:1-16:8) இயேசு எருசலேமில் பாடுகள் பட்ட நிகழ்ச்சியையும் அதன் சூழலையும் விவரிக்கின்றன. அந்த ஒரு வார காலத்தில் நிகழ்ந்ததை மாற்கு படிப்படியாக எடுத்துரைக்கிறார். முதல் நாட்களில் நடந்த நிகழ்வுகள் இவை (11:1-13:37): இயேசு எருசலேம் நகருக்குள் நுழைகிறார்; எருசலேம் திருக்கோவிலுக்குப் போகிறார் (மாற் 11:1-11); அங்கு ஓர் இறைவாக்கினரைப் போலப் போதிக்கிறார் (11:12-19); அவருடைய எதிரிகளோடு வாதத்தில் ஈடுபடுகிறார் (11:20-12:44); எதிர்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (மாற் 13:1-37).

இயேசுவின் பாடுகள் பற்றிய கூற்றுத்தொடர் மாற்கு 14:1-16:8 பகுதியில் உள்ளது. அதில் இயேசுவின் சாவுக்கு முன் ஒரு பெண் இயேசுவின் மேல் நறுமண எண்ணெய் பூசிய நிகழ்ச்சியோடு, இயேசுவின் இறுதி இரா உணவும் விளக்கப்படுகிறது (மாற் 14:1-31); பின் இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டலில் ஈடுபடுகிறார்; அதைத் தொடர்ந்து இயேசு கைதுசெய்யப்படுகிறார் (மாற் 14:32-52); தலைமைக் குருவின் முன்னிலையிலும், தலைமைச் சங்கத்தின் முன்னிலையிலும், உரோமை ஆளுநராகிய பிலாத்துவின் முன்னிலையிலும் இயேசு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் (மாற் 14:53-15:15); இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விடுகிறார்; கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார் (மாற் 15:16-47)ஃ வாரத்தின் முதல் நாள் இயேசுவின் கல்லறை வெறுமையாயிருப்பதைச் சீடர்கள் காண்கிறார்கள் (மாற் 16:1-8).

வரிசை 108:
| '''பகுதி 2: இயேசுவே மெசியா'''
1. இயேசுவும் மக்கள் கூட்டமும்

2. இயேசுவும் சீடர்களும்

3. இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல்

4. இயேசு மெசியா என்னும் அறிக்கை
| 1:14 - 8:30
1:14 - 3:6

3:7 - 6:6அ

6:6ஆ - 8:26

8:27-30
| 64 - 79
64 - 68

68 - 73

73 - 79

79

| '''பகுதி 3: இயேசுவே மானிடமகன்'''
1. பயணம் செய்யும் மானிடமகன்

2. எருசலேமில் மானிடமகன்

3. மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல்
| 8:31 - 16:8
8:31 - 10:52

11:1 - 13:37

14:1 - 16:8
| 79 - 98
79 - 85

85 - 92

92 - 98

| '''பகுதி 4: முடிவுரை'''
வரிசை 139:
| 99

== மாற்கு நற்செய்தியில் வரும் கதா பாத்திரங்கள் ==

=== 1. இயேசு ===

இந்த நற்செய்தியின் முக்கிய கதாபாத்திரம் [[இயேசு கிறித்து|இயேசு கிறித்து]] என்பதில் ஐயமில்லை. நூலின் தொடக்கத்திலேயே ''இயேசு கடவுளின் மகன்'' என மாற்கு அடையாளம் காட்டுகிறார் (மாற் 1:1). இயேசு ஞானத்தைப் போதித்த ஒரு தலைசிறந்த ஆசிரியராகவும், நோய்களிலிருந்து மக்களை விடுவித்த மாபெரும் நலமளிப்பவராகவும் காட்டப்படுகிறார் எனினும், இயேசு உண்மையிலேயே யார் என்பது அவரது சாவின்போதுதான் முழுமையாக வெளிப்படுகிறது. இதை விவிலிய அறிஞர் '''மெசியா இரகசியம்''' (Messianic Secret)<ref>[http://en.wikipedia.org/wiki/Messianic_Secret மெசியா இரகசியம்]</ref> என அழைப்பர். அதாவது, மெசியா என்றால் வலிமைமிக்க ஓர் அரசனைப் போல இவ்வுலகில் வந்து உரோமையரின் ஆட்சியைக் கவிழ்த்து, இசுரயேலை விடுவிப்பார் என்று மக்கள் நினைத்திருந்த பின்னணியில் இயேசு தம்மை '''மெசியா''' என்று அடையாளம் காட்டவில்லை.

வரிசை 150:

=== 2. சீடர்கள் ===

இயேசுவை உயிரோட்டத்தோடு சித்தரிக்கும் மாற்கு இயேசுவின் சீடர்களது குணநலன்களையும் கருத்தாக விவரிக்கிறார். தொடக்கத்தில் சீடர்கள் மிகுந்த உற்சாகத்தோடுதான் இயேசுவின் அழைப்பை ஏற்றனர்; அவரைப் பின்செல்லத் தொடங்கினர் (மாற் 1:16-20). இயேசுவோடு இருக்கவும் அவரது பணியில் பங்கேற்றுக் கடவுளின் ஆட்சி பற்றிப் போதிக்கவும், நோயாளரைக் குணப்படுத்தவும் ஆர்வத்தோடுதான் முன்வந்தனர் (மாற் 3:14-15). அந்தத் தொடக்கக் கட்டத்தில் இயேசுவின் சீடர் நல்ல எடுத்துக்காட்டாகவே இருந்தனர். ஆனால் நிகழ்வுகள் தொடரத் தொடர, அச்சீடர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். இது எவ்வளவு தூரம் போய்விட்டதென்றால், இயேசு கலிலேயப் பணியை முடிவுக்குக் கொணரும் வேளையில் சீடரைப் பார்த்து, ''உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?...இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'' என்று கூட கேட்கவேண்டியதாயிற்று (மாற் 8:17, 21).
வரிசை 160:
இதற்கும் மேலாக, சீடர்கள் நடுவே தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்த பேதுரு தம் குருவாகிய இயேசுவை ஒருமுறை அல்ல, மூன்று முறை மறுதலிக்கிறார் (மாற் 14: 66-72). இவ்வாறு, படிப்படியாக சீடர்கள் நலமான முன்மாதிரியிலிருந்து நலமற்ற முன்மாதிரியாகி;விடுகிறார்கள்; அறிவு மழுங்கியவர்களாக, கோழைகளாக மாறிவிடுகிறார்கள்; ஆனால் இயேசுவோ துன்பங்கள் நடுவேயும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நிலைத்துநின்று நலமான முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

=== 3. எதிரிகள் ===

இயேசுவின் எதிரிகளையும் மாற்கு திறம்படச் சித்தரித்துள்ளார். கலிலேயாவில் பொதுப்பணி ஆற்றியபோதும், எருசலேம் நோக்கிப் பயணம் மேற்கொண்ட போதும், எருசலேம் நதரிலும் இயேசு பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்கிறார். முதல் கட்டத்தில் இயேசுவின் போதனையையும் அவரது குணமளிக்கும் செயலையும் ஏற்க மறுத்தவர்கள் பரிசேயரும் ஏரோதியரும் ஆவர் (மாற் 3:6). தொடர்ந்து, இயேசுவின் போதனையையும் நலமளிக்கும் அதிசய செயல்களையும் ஏற்க மறுத்து, ஐயுற்றவர்கள் அவரது சொந்த ஊரைச் சார்ந்த மக்கள். இது இயேசுவுக்கே பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. ''அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்'' (மாற் 6:6). இயேசுவின் கலிலேயப் பணியின் இறுதிக் கட்டத்தில் அவரை நெருங்கிப் பின்பற்றி, அவரோடு இருந்து பழகிய அவரது சீடரே அவரைத் தவறாகப் புரியும் அளவுக்கு நிலைமை போய்விட்டிருந்தது (மாற் 8:14-21).

வரிசை 173:
இயேசுவுக்கு எதிரிகளாக இருந்த இவர்கள் எல்லாரும் இயேசு வழங்கிய செய்தியைப் புரிந்துகொள்ளவில்லை; மாறாக, அவருக்கு எதிராகச் செயல்பட்டார்கள். இதை மாற்கு மிகத் தத்ரூபமாக எடுத்துரைக்கிறார்.

== மாற்கு நற்செய்தியின் இறையியல் ==

மேலே, மாற்கு நற்செய்தியில் வரும் கதாபாத்திரங்களை அவர் சித்தரிக்கும் முறையும் கதைக் கருவை அவர் நளினமாகக் கட்டவிழ்ப்பதும் சிறிது விளக்கப்பட்டது. இந்த இலக்கியப் பாணியை நாம் புரிந்துகொண்டால் மாற்கு நற்செய்தியில் காணும் இறையியல் பார்வையையும் சிறிது ஆழமாக அறிந்திட இயலும்.

=== இயேசு யார்? ===

''யார் இந்த இயேசு?'' - இந்தக் கேள்வி மாற்குவுக்கு முக்கியமானது. இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் நற்செய்தி முழுவதுமே அமைந்துள்ளது என்றுகூடச் சொல்லலாம். இயேசுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புப் [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|பெயர்கள்]] மாற்குவின் சமூகத்திற்கு ஏற்கெனவே தெரிந்திருந்தன. அவை '''மானிடமகன்''', '''தாவீதின் மகன்''', '''இறைமகன்''', '''மெசியா''', '''ஆண்டவர்''' போன்றவை ஆகும். எனவே இயேசு கடவுளின் ஆட்சியை அறிவிக்க வந்தார் என்பதை எடுத்துக் கூறுவதில் மாற்கு கவனத்தைச் செலுத்துகிறார். "யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். 'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று அவர் கூறினார்" (மாற் 1:14-15).
வரிசை 185:
இயேசுவின் பொதுப் பணிக் காலம் முழுவதும் அவர் அதிகாரத்தோடு போதிப்பதைப் பார்க்கிறோம். வல்லமையோடு [[இயேசுவின் புதுமைகள்|புதுமைகள்]] பல நிகழ்த்துவதையும் காண்கின்றோம். என்றாலும், இயேசுவின் பணியை வரையறுக்கும் இந்த அம்சங்களை நாம் அவரது சிலுவைச் சாவின் ஒளியில்தான் சரிவரப் புரிந்துகொள்ள முடியும். இயேசு ''மெசியா'' என்பது அவரது பாடுகள், மரணம் ஆகியவற்றின் ஒளியில்தான் தெளிவுபெறுகிறது. இந்த விதத்தில் மெசியா உண்மையில் யார் என்பதை மாற்கு கூறும் இயேசுவின் வரலாற்றுக் கதை நமக்கு ஐயமற விளக்குகிறது.

=== இயேசுவைப் பின்செல்வது எப்படி? ===

இயேசுவைப் பின்செல்வது என்பதன் பொருள் என்ன? இதை இயேசுவின் பன்னிரு சீடர் நடந்துகொண்ட பின்னணியில் மாற்கு விளக்குகிறார். சீடர்களை இயேசு அழைத்ததும் அவர்கள் யாவற்றையும் விட்டுவிட்டு, மிகுந்த உற்சாகத்தோடு அவர் பின்னே சென்றனர் (மாற் 1:16-20).
வரிசை 195:
நற்செய்தி நூலின் முதல் பகுதியில் வாசகர் தம்மைச் சீடரோடு எளிதில் ஒன்றுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஆனால், கதை தொடரத் தொடர, சீடரை விட்டு விலகிப்போய், இயேசுவையே நமது நல்ல முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள மாற்கு இட்டுச்செல்கிறார்.

=== பெண் சீடர்கள் ===

பன்னிரு சீடரும் அளிக்கின்ற பின்பற்றத் தகாத முன்மாதிரிக்கு நேர் எதிராக உள்ளது நற்செய்தியில் வரும் பெண்களின் ஆக்கப்பூர்வமான முன்மாதிரி. பெயர் அறியப்படாத பெண் ஒருவர் இயேசுவை விலை உயர்ந்த நறுமணத் தைலத்தால் பூசுகிறார் (மாற் 14:3-9). இவ்வாறு, இயேசுவே மெசியா என்னும் உண்மை வெளிப்படுகிறது. ஏனென்றால், ''மெசியா'' என்னும் சொல்லுக்குப் பொருளே ''திருப்பொழிவு பெற்றவர்'' என்பதே. ஆகவே, நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றிய பெண் இயேசுவை மெசியா என அறிவிக்கிறார். அதே நேரத்தில் இயேசுவின் அடக்கத்திற்கு ஒரு முன்னறிவிப்பாக இப்பூசுதல் அமைந்தது என இயேசுவே கூறி அப்பெண்ணின் செயலைப் பாராட்டுகிறார் (மாற் 14:8-9).
வரிசை 205:
இப்பெண் சீடருள் புகழ்பெற்றவர் மகதலா நாட்டு மரியா. இறந்த இயேசு உயிர்பெற்று எழுந்துவிட்டார் என்ற உண்மைக்கு இவரே முதல் சான்று. நாம் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசுவின் உயிர்த்தெழுதலில்]] இன்று நம்பிக்கை கொள்வதற்கும் இந்த மரியாவின் சாட்சியே ஆதாரமாகிறது.

=== கிறித்தவ வாழ்வு ===

மாற்கு நற்செய்தியில் கிறித்தவ வாழ்வு என்பது இயேசுவின் சிலுவையோடு நெருங்கிப் பிணைந்துள்ளது. இயேசு விடுக்கும் அழைப்புக்கு ஆள்முறையில் பதில் தருவதும், அவரோடு உறவுப் பிணைப்பில் இணைவதும், அவரது பணியில் பங்கேற்பதும், கிறிததவ வாழ்வின் கூறுகளாகும். பன்னிரு சீடரும் தொடக்கத்தில் இவ்வாறே இயேசுவை ஆர்வத்தோடு பின்சென்றனர் என மாற்கு நற்செய்தி வலியுறுத்துகிறது.
வரிசை 247:
[[es:Evangelio de Marcos]]
[[et:Markuse evangeelium]]
[[eu:MarkosenMarkoren Ebanjelioa]]
[[fa:انجیل مرقس]]
[[fi:Evankeliumi Markuksen mukaan]]
"https://ta.wikipedia.org/wiki/மாற்கு_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது