ஒமாகா கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pt:Praia de Omaha
சி பகுப்பு மாற்றம் using AWB (7774)
வரிசை 19:
{{போர்த்தகவல்சட்டம் நார்மாண்டி படையெடுப்பு}}
 
'''ஒமாஃகா கடற்கரை''' (ஒமாஹா கடற்கரை; ''Omaha Beach'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யில் [[நார்மாண்டி]] கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். ([[ஒமாஃகா]] அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான் [[நெப்ராஸ்கா]]விலுள்ள நகரம்).
 
[[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பிலிருந்த [[பிரான்சு]] மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - [[யூட்டா கடற்கரை|யூட்டா]], ஒமாகா, [[கோல்ட் கடற்கரை|கோல்ட்]], [[ஜூனோ கடற்கரை|ஜூனோ]] மற்றும் [[சுவார்ட் கடற்கரை|சுவார்ட்]]. 8 கிமீ நீளமுள்ள ஒமாகா கடற்கரை யூட்டா மற்றும் கோல்ட் கடற்கரைகளுக்கு இடையில் அமைந்திருந்தது. சென்-ஹொனோர்-டெ-பெர்டே கம்யூனிலிருந்து [[டூவ் ஆறு|டூவ் ஆற்றின்]] முகத்துவாரத்தின் வடகரையிலுள்ள வியர்வில் கம்யூன் வரையான கடற்கரை ஒமாகா என்று பெயரிடப்பட்டிருந்தது.
 
ஒமாகா கடற்கரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன் மேற்குப் பகுதியைக் கைப்பற்றும் பொறுப்பு அமெரிக்க 29வது காலாட்படை [[டிவிசன்]] மற்றும் அமெரிக்கத் தரைப்படை ரேஞ்சர் படைப்பிரிவின் ஒன்பது [[கம்பனி (படைப்பிரிவு)|கம்பனி]]களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிழக்குப் பகுதியினைக் கைப்பற்றும் பொறுப்பு 1வது அமெரிக்கக் காலாட்படை டிவிசனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றுள் 29வது டிவிசன் போர் அனுபவமற்ற படைப்பிரிவு, 1வது டிவிசன் அனுபவம் வாய்ந்தது. இவர்களை எதிர்க்க ஜெர்மானிய 352வது காலாட்படை டிவிசன் ஒமாகா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையிலிருந்து]] நார்மாண்டிக்கு மாற்றப்பட்டிருந்த இப்படைப்பிரிவில் ஒரு பகுதியினர் மட்டுமே போர் அனுபவம் உடையவர்கள்.
 
ஜூன் 6ம் தேதி காலையில் அலை அலையாகத் தரையிறங்கி ஜெர்மானிய அரண்நிலைகளை அழிப்பது, அதன்பின்னர் எட்டு கிமீ நீளமுள்ள ஒரு பாலமுகப்பை ஏற்படுத்தி யூட்டா கடற்கரைப் படைப்பிரிவுகளுடன் கைகோர்ப்பது ஒமாகா படைப்பிரிவுகளின் முதல் இலக்கு. அமெரிக்கப் படைகளைத் தரையிறங்க விடாமல் கடலும் கரையும் இணையும் நீர்க்கோட்டில் (waterline) வைத்தே அவர்களை அழிப்பது ஜெர்மானியத் திட்டம். படையெடுப்புக்கு முன் ஜெர்மானிய அரண் நிலைகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நேசநாட்டு வான்வழி குண்டுவீச்சு, மேக மூட்டம் காரணமாக வெற்றி பெறவில்லை. சேதமடையாத ஜெர்மானிய பீரங்கி நிலைகளும், துப்பாக்கி நிலைகளும் அமெரிக்கப் படைகள் தரையை அணுகும் போதே குண்டுமழை பொழிய ஆரம்பித்தன.
வரிசை 46:
{{Commons category|Omaha Beach |ஒமாகா கடற்கரை}}
 
[[பகுப்பு: மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]
{{Link FA|zh}}
 
[[பகுப்பு: மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]
[[பகுப்பு:1944 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:ஜெர்மன்செருமன் வரலாறு]]
[[பகுப்பு:பிரான்சின் வரலாறு]]
 
{{Link FA|zh}}
[[ar:شاطئ أوماها]]
[[br:Omaha Beach]]
"https://ta.wikipedia.org/wiki/ஒமாகா_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது