மினெர்வா மேல் புனித மரியா கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca, cs, de, es, fr, id, it, ja, ka, ko, mk, nl, pl, pt, ru, sk, sv, uk, zh
சி சேர்க்கை
வரிசை 36:
 
இக்கோவில் எழுகின்ற இடத்தில் பண்டைக்காலத்தில் ஐஸிஸ் என்னும் எகிப்திய தெய்வத்துக்கு ஒரு கோவில் இருந்தது. அக்கோவில் கிரேக்க-உரோமை தெய்வமாகிய மினெர்வாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகத் தவறாகக் கருதப்பட்டது. அக்கோவில் இருந்த இடத்திலேயே, மரியாவுக்குக் கோவில் எழுப்பப்பட்டதால் ''மினெர்வா மேல் புனித மரியா கோவில்'' என்னும் பெயர் தோன்றிற்று. இக்கோவிலின் முகப்பு பார்வைக்கு எளிமையாக இருந்தாலும், கோவிலின் உட்பகுதியில் விலைமதிப்பற்ற கலைச் செல்வங்கள் உள்ளன. சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களைப் பின்னணியாகக் கொண்ட உட்கூரையில், விண்மீன் குறிகள் பதித்த சித்திரங்கள் உள்ளன. கோத்திக் கலைப் பாணி 19ஆம் நூற்றாண்டில் இக்கோவிலில் புகுத்தப்பட்டது. உரோமை நகரில் கோத்திக் கலைப்பாணியில் அமைந்த ஒரே கோவில் இதுவே என்பதும் சிறப்பு.
[[Image:Lazio Roma SMMinerva1 tango7174.jpg|thumb|left|மினெர்வா மேல் புனித மரியா கோவில் உள்பகுதியின் எழில்மிகு தோற்றம்]]
{{under construction}}
==கோவிலின் வரலாறு==
 
இன்று மினெர்வா மேல் புனித மரியா கோவில் எழுகின்ற இடத்தைச் சூழ்ந்த பகுதியும், கோவிலை அடுத்த துறவியர் இல்லப் பகுதியும் முற்காலத்தில் உரோமை கலாச்சாரத்தைச் சார்ன்த மூன்று கோவில்களை உள்ளடக்கியிருந்தன. அக்கோவில்கள்:
#கி.மு. 50ஆம் ஆண்டளவில் க்னேயுஸ் பொம்பேயி என்பவர் மினெர்வா தெய்வத்திற்குக் கட்டிய கோவில் ("மினெர்வியும்");
#எகிப்திய தெய்வமாகிய ஐஸிஸ் என்னும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ("ஐசேயும்");
#சேரப்பிஸ் என்னும் தெய்வத்திற்க்குக் கட்டப்பட்ட கோவில் ("சேரப்பேயும்").
 
இம்மூன்று பண்டைய உரோமை சமயக் கோவில்களுள் "ஐசேயும்" என்னும் கோவில் பற்றி அதிகம் அறிய முடிகிறது. "மினெர்வியும்" பற்றி அதிகச் செய்திகள் இல்லை. ஆனால், மினெர்வாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறு கோவில் இன்றைய மரியா கோவிலிலிருந்து சற்று தொலைவில் இருந்ததற்கான அகழ்வாய்வுத் தடயங்கள் கிடைத்துள்ளன.
 
கி.பி. 1665இல் மரியா கோவிலுக்கு அருகிலுள்ள சாமிநாதர் சபைத் துறவியர் இல்லத் தோட்டத்தில் ஓர் எகிப்திய ஊசித்தூண் (obelisk) அகழ்ந்தெடுக்கப்பட்டது. பின்னர் மரியா கோவிலருகே மேலும் பல எகிப்திய ஊசித்தூண்கள் வெவ்வேறு காலங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி. முதல் நூற்றாண்டில் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டு, இரண்டு இரண்டாக ஐஸிஸ் கோவில் நுழைவாயிலில் நாட்டப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
==மரியா கோவிலின் உள்பகுதி==
 
மரியா கோவிலின் உள்ளே, அடிமட்டத்திற்குக் கீழ் பண்டைய உரோமைக் கலாச்சாரத் தடயங்கள் உள்ளன. உரோமை சமயக் கோவில்கள் அழிந்து கிடந்த நிலை [[சக்கரியா (திருத்தந்தை)|திருத்தந்தை சக்கரியா]] காலம் வரை (741-752) நீடித்தது. அவர் காலத்தில் இப்பகுதி கிறித்தவ மயமாக்கப்பட்டது. கீழைச் சபைத் துறவியரிடம் இப்பகுதி ஒப்படைக்கப்பட்டது. அத்திருத்தந்தை காலத்தில் எழுந்த கட்டடம் இன்று இல்லை.
 
[[நான்காம் அலக்சாண்டர் (திருத்தந்தை)|திருத்தந்தை நான்காம் அலக்சாண்டர்]] மரியா கோவில் பகுதியில் ஒரு துறவற இல்லத்தை 1255இல் நிறுவினார். கிறித்தவ சமயத்தைத் தழுவிய பெண்களுக்கென அவ்வில்லம் அமைந்தது. பின்னர் அத்துறவியர் சான் பங்கிராசியோ என்னும் பகுதிக்கு மாற்றப்பட்டனர். 1275இல் சாமிநாதர் சபைத் துறவியர் கோவிலையும் துறவற இல்லத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றனர். இத்துறவியர் இக்கோவிலையும் துறவற இல்லத்தையும் தம் தலைமையிடமாக்கினர். பிற்காலத்தில் அவர்களின் தலைமையிடம் சாந்தா சபீனா என்னும் இடத்திற்கு மாறியது. மரியா கோவிலும் துறவற இல்லமும் இன்று சாமிநாதர் சபையினரின் பொறுப்பிலேயே உள்ளன.
[[Image:Bernini-Elefant.jpg|thumb|left|மரியா கோவில் முற்றத்தில் உள்ள ஊசித்தூண். உரோமை நகரில் உள்ள எகிப்திய ஊசித்தூண்கள் பதினொன்றில் ஒன்றாகிய இத்தூணின் அடியில் ஜான் லொரேன்சோ பெர்னீனி உருவாக்கிய புகழ்பெற்ற யானை உருவம் உள்ளது]]
 
==ஆதாரங்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மினெர்வா_மேல்_புனித_மரியா_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது