தொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Many hats.jpg|rightthumb|thumbnail125px|தொப்பிகள் பலவிதம்]]
 
'''தொப்பி''' (Hat) என்பது தலையில் அணியும் ஓர் [[அணி]]யாகும். தொப்பிகளில் பல வகைகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் வேறுபாடுகளும் உண்டு. [[வட்டம்]], [[நீள்வட்டம்]] என பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. அழகுக்காகவும், நிழலுக்காகவும், தூசு-மாசிலிருந்து காக்கவும், தொப்பிகள் பயன்படுகின்றன. சடங்குகள், சமயத் தேவைகளுக்கும் தொப்பிகள் பயன்படுவது உண்டு. படைத்துறையில், நாட்டினம், சேவைப் பிரிவு, தரநிலை, படைப்பிரிவு என்பவற்றைத் தொப்பிகள் குறித்துக் காட்டுவது உண்டு.
 
==வரலாறு==
[[Image:Chapeaux en peau de castor.jpg|thumb|left|150px|19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தொப்பிகள் சில.]]
தொப்பியைக் காட்டும் மிகப் பழைய படங்களில் ஒன்று தேப்சுக் கல்லறையில் உள்ள ஓவியம் ஒன்றில் காணப்படுகிறது. ஒரு மனிதன் வைக்கோல் தொப்பியொன்றை அணிந்திருப்பதை இப் படம் காட்டுகிறது. எளிமையான கூம்புவடிவத் தொப்பியான [[பிலெயசு]], பண்டைக் கிரேக்கத்திலும், ரோமிலும் விடுதலையான அடிமைகள் அணியும் [[பிரிகியன் தொப்பி]] என்பனவும் மிகவும் பழைமையான தொப்பிகளுள் அடங்குவன. கிரேக்கத்தின் [[பெட்டாசோசு]] எனப்படும் தொப்பியே இதுவரை அறியப்பட்டவைகளுள் விளிம்புடன் கூடிய முதல் தொப்பி ஆகும். பழைய காலத்தில் பெண்கள், முகத்திரை, [[முக்காடு]] போன்றவற்றை அணிந்தனர். 16 ஆம் நூற்றாண்டிலேயே பெண்களும் ஆண்கள் அணிவதுபோன்று செய்யப்பட்ட தொப்பிகளை அணியத் தொடங்கினர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது