விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==வரலாறு==
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முனைப்படையத் தொடங்கிய காலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன. அப்பாடல்களை புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் போன்ற ஈழத்துக் கவிஞர்களும், கவிஞர் இன்குலாப் போன்ற தமிழகத்துகத்துக்தமிழகத்துக் கவிஞர்களும் எழுதியிருந்தார்கள். டி.எம். செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணிஜெயராம், சுவர்ணலதா போன்ற முதன்மை இசைக்கலைஞர்கள் பாடல்களைப் பாடியிருந்தார்கள். எல். வைத்தியநாதன் பல பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். இந்தியஇராணுவம் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்திலும் தமிழகத்திலிருந்து பாடல்கள் வந்து கொண்டிருந்தன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்தான் ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எழுச்சிப் பாடல்கள் வீச்சோடு வளர்ச்சியுற்றன. முழுக்க முழுக்க உள் ஊரிலேயே பாடல்களுக்கான முழு வேலைகளும் செய்ய வேண்டிய நிலையில் இயக்கத்துக்குள்ளேயே இசைக்கலைஞர்களை வளர்த்தெடுக்கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில் மட்டக்களப்பில் போராளிகளைக் கொண்டு ஒரு இசைக்குழு தொடங்கப் பெற்றது. அக்குழு மிகப்பெரிய அளவில் வளர்ந்து ஏராளமான பாடல்களை போராட்காலங்களில் உருவாக்கியது.
 
==வெளியீடுகள்==