மௌடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
{{ஆ}}
வரிசை 1:
[[Image:BambooFlowering.jpg|thumb|250px|மூங்கில் பூப்பு]]
'''''மௌ டம்''''' (Mau tam) என்பது 48 [[ஆண்டு]]களுக்கு ஒருமுறை [[மூங்கில்]] மரங்கள் எல்லாம் ஒருசேரப் [[பூ]]த்து மடியும் ஒரு விந்தையான [[சுற்றுச்சூழல்]] நிகழ்வைக் குறிக்கும், ''மூங்கிற் சாவு'' எனப்பொருள்படும் [[மிசோ]] மொழிச் சொல்லாகும். [[இந்தியா]]வின் வட கிழக்கு [[மாநிலம்|மாநிலங்களில்]] ஒன்று [[மிசோரம்]]. இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது [[விழுக்காடு]] பகுதியில் மூங்கில் [[காடு]]கள் உள்ளன.<ref name=mizoboard>[http://mizobamboo.nic.in/mizbamboo.htm மிசோரம் மூங்கில் வளர்ச்சித்துறை]{{ஆ}}</ref>
 
==இயங்கமைவு==
''மௌ டம்'' நிகழ்வின்போது ''மெலொகன்னா பாக்கிஃபெரா'' (''Melocanna baccifera'') என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து [[பெருச்சாளி]]கள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக [[பிளேக்]] நோய் பரவ வாய்ப்புண்டாகிறது. <ref name=species>Peter Foster, [http://www.papillonsartpalace.com/bamfboo.htm மூங்கில் காரணமாக இந்திய மாநிலத்தில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு], [[14 அக்டோபர்]] [[2004]]{{ஆ}}</ref>
 
சில மூங்கில் மரங்கள் இந்த வழக்கத்திற்கு மாறாக ஒருசேரப் பூக்காமல் இடையே பூப்பதுண்டு. ஆனால், அவ்வமயங்களில் சில விதைகளே உருவாவதால் அவற்றில் பெரும்பாலானவை பெருச்சாளிகளிக்குத் தீனியாகிவிடுகின்றன. இதனால் அவற்றின் [[மரபியல்|மரபுவழித்தோன்றல்]] முற்றுப் பெறுகிறது. நெடுங்காலம் இவ்வாறு நடைபெறுவதால் மூங்கில்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கத் துவங்குகின்றன. இம்முறையிலான [[உய்வு உத்தி]]யை (''survival strategy'') [[கோண்மா தெவிட்டும் மலிவு]] (''predator satiation'') என்று அழைப்பர்.<ref name=seed_dispersal>{{cite journal
வரிசை 22:
| format = PDF
| accessdate = ஜூன் 15, 2006
}}{{ஆ}}
</ref> இதே உத்தியை [[குறிஞ்சி (தாவரம்)|குறிஞ்சி]] செடிகளும் 12 ஆண்டுகளுக்கொருமுறை பூப்பதின் மூலம் பயன்படுத்துகின்றன.<ref name=kurinji>[http://www.hindu.com/seta/2006/06/15/stories/2006061500421700.htm த ஹிந்து நாளிதழில் செந்தில் சுப்ரமணியம்]</ref> சில நேரங்களில், இவ்வுத்தியைக் கையாளும் உயிரினங்களுக்கு எதிரான கொன்றுண்ணிகளின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] சுழற்சியும் இறையின் இனப்பெருக்க சுழற்சியின் ஒரு பகுப்பாக அமையக் கூடும். இவ்வாறான கொன்றுண்ணிகளிடமிருந்து மீளும்விதமாக சில [[உயிரினம்|உயிரினங்கள்]] 11, 13 போன்ற [[பகா எண்]] (''prime number'') ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன!
 
வரிசை 31:
 
==மாற்று ஏற்பாடுகள்==
சோரம்தெங்கா அரசு இந்த முறை ''மௌ டம்'' நிகழ்வை எதிர்நோக்கி இரு ஆண்டுகளாகத் தயார்நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது இந்திய இராணுவத்தின் துணையை நாட வேண்டியதுள்ளது.<ref name=army>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5044436.stm இந்திய இராணுவத்தின் பங்கு பற்றிய பி.பி.சி. செய்தி]{{ஆ}}</ref> இராணுவமும் மாநில நிர்வாகமும் இணைந்து எலிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிகளை மக்களுக்குத் தெரிவிக்கின்றன. மேலும் [[மஞ்சள்]], [[இஞ்சி]] போன்ற [[செடி]]களைப் [[வேளாண்மை|பயிரிடுமாறு]] மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவற்றைப் பயிரிடுவதால் மக்களின் [[வாங்கு திறன்]] பாதிக்கப்படுவது குறையும் என்றும், வாசனைப் பயிர்களின் விளைவாக [[கொறிணி]]களின் எண்ணிக்கை குறையும் என்றும் நம்பப்படுகிறது.<ref name=strategy>[http://www.aciar.gov.au/web.nsf/att/JFRN-6BN99Y/$file/mn96chapter2.pdf இந்தியாவில் எலி மூலம் சிக்கல், தீர்வு வழிகள்] ([[PDF]] format)</ref>
 
==மிசோரம் தவிர பிற இடங்களில்==
இதேபோன்ற ஒருமித்த மூங்கில் பூப்பை ஒட்டிய எலிகளின் அளவுக்கதிகமான இனப்பெருக்கம் அண்டை மாநிலங்களான [[அருணாசல பிரதேசம்]], [[மணிப்பூர்]], மற்றும் [[நாகாலாந்து]],<ref name=strategy /> ஆகியவற்றிலும், [[லாவோஸ்]], [[மடகாஸ்கர்]], [[ஜப்பான்]] மற்றும் [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்க நாடுகளிலும்]] ஏற்படுகின்றது.<ref name=laos>[http://www.aciar.gov.au/web.nsf/att/JFRN-6BN99X/$file/mn96chapter1.pdf லாவோஸ் மேடுகளில் எலிச்சிக்கல்: வரலாற்றுப்பாங்குகளைப் பற்றிய பகுப்பாய்வு] ([[PDF]] format) {{ஆ}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மௌடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது