சிட்ருலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
}}
 
'''சிட்ருலின்''' (Citrulline) ஒரு ஆல்ஃபா- [[அமினோ அமிலம்|அமினோ அமிலமாகும்]]. இதனுடைய நல்லியல் வாய்பாடு: H2NC(O)NH(CH2)3CH(NH2)CO2H. சிட்ருலின், [[பாலூட்டிகள்]] [[அம்மோனியா]] கழிவுநீக்கத்திற்குப் பயன்படுத்தும் [[யூரியா|யூரியா சுழற்சி]] தடவழியில் உள்ள ஒரு முக்கிய இடைநிலை வேதிப் பொருளாகும். ஒர்னிதின் மற்றும் கார்பமோயில் பாஸ்பேட்டிலிருந்து சிட்ருலின் உருவாக்கப்படுகிறது. இவ்வினையானது, யூரியா சுழற்சியில் உள்ள மைய வினைகளுள் ஒன்றாகும். மேலும், நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும் நொதி (Nitric oxide synthase) [[ஆர்ஜினின்]] அமினோ அமிலத்திலிருந்து நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும்போது, சிட்ருலின் துணைவிளைபொருளாக உருவாகிறது. நேரடியாக சிட்ருலின் [[டி.என்.ஏ]] மூலக்கூறிலிருந்து குறிமுறையீடு செய்யாப்படாவிடினும், [[புரதம்|புரத]]ப்பெயர்ப்பிற்கு பின்னான மாற்றங்களினால் பல புரதங்களும் சிட்ருலினாக்கப்படுகின்றன. புரதங்களில் சிட்ருலின் படிவுகள், பெப்டைடுஆர்ஜினின் இமைன்நீக்கி நொதிகளால் (peptidylarginine deiminases) உருவாக்கப்படுகின்றது. முடக்குவாத நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சுழலான சிட்ருலினாக்கப்பட்ட புரதக்கூறு/புரதத்திற்கு எதிரான [[பிறபொருளெதிரி|எதிர்ப்பான்கள்]] (பிறபொருளெதிரிகள்) நோயை கண்டறியப் பயன்படுகின்றன.
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிட்ருலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது