பந்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
== தலபுராணம் ==
தலபுராணத்தின் படி, சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவனான சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். இதன் ‎காரணமாக [[சபரிமலை]]க்கு பக்தர்கள் வரும் காலங்களில், ‎பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே ‎குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் ‎அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை ‎பக்தியுடன் தொழுகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ‎ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி ‎அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை ‎‎(திருவாபரணம் என்று அறியப்படுவது) பந்தளத்தில் இருந்து ‎சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து ‎வருகிறது. ‎
 
பந்தளத்தில் காணப்படும் இதர புண்ணிய தலங்களானவை ‎மகாதேவர் கோவில், குறம்பல புத்தன்கவி பகவதி கோவில், ‎தொன்னல்லூர் பட்டுப்புறக்காவு பகவதி கோவில், கைப்புழா ஸ்ரீ ‎கிருஷ்ண சுவாமி கோவில், பூழிக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், ‎கடக்காடு மாயாயக்ஷிக்காவு ஸ்ரீ கிருஷ்னர் கோவில், பல ‎நூற்றாண்டுகள் பழமையான கடக்காட்டு ஜுமா மஸ்ஜித், ‎தும்பாமொன் பாரம்பரிய தேவாலயம் மற்றும் குறம்பலையில் ‎உள்ள செயின்ட் தோமாஸ் புனித தேவாலயம். ‎
 
== வரலாறு ==
தமிழ் நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களில் சிலர் போரில் ‎தோல்வி அடைந்ததால் ஊரை விட்டு ஓடிவந்ததாகவும், இங்கே ‎இருந்த நில உரிமையாளர்களில் ஒருவரான கைப்புழா தம்பனிடம் ‎இருந்து இங்கு நிலம் வாங்கியதாகவும், ஐதீகங்கள் கூறுகின்றன. ‎மேற்கு மலைத்தொடர்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ‎ராஜ்ஜியங்கள் பாண்டிய அரசரின் ஆட்சியில் இருந்துவந்தது. ‎பந்தளத்தின் மகாராஜா மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் ‎காயம்குளம் இராஜ்ஜியத்தை கைப்பற்ற உதவினார். இந்த ‎உதவிக்கு கைமாறாக, மார்த்தாண்ட வர்மா தனது ‎சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய பொழுது, பந்தளத்தின் மீது ‎படையெடுத்து அதையும் தன சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க ‎விரும்பவில்லை. ஒரு காலகட்டத்தில் பந்தள மகாராஜாவின் ‎தர்பார் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா என்ற இடம் வரை ‎பரந்து விரிந்திருந்தது. 1820 ஆண்டில் பந்தளம் திருவிதாங்கூறுடன் ‎இணைக்கப்பட்டது. ‎
2,128

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/822074" இருந்து மீள்விக்கப்பட்டது