எழினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"எழினி என்னும் பெயருடன் சங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
ஏழு வள்ளல்களில் ஒருவனாக அதியமானை ஒரு புலவர் காட்டுகிறார், அவனை அவர் ஔவைக்கு நல்லிக்கனி ஈந்த அதிகன் எனக் குறிப்பிடுகிறார். . இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படை 100-103
 
இந்த அதியமானின் மகன் எழினியை மற்றொரு புலவர் அந்த ஏழு வள்ளல்களில் ஒருவன் என்கிறார். . பெருஞ்சித்திரனார் தம் தொகுப்பில் ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கொடும்பூண் எழினி என்கிறார்
 
அதியமான் மரபினர் முதன் முதலாகத் தமிழ்நாட்டுக்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிரிட்டனர். புறம் 396
 
எழினி என்னும் சொல் திரைச்சீலையைக் குறிக்கும் முல்லைப்பாட்டு 64 எனவே எழினி என்னும் பெயர் குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குபவன் எனப் பொருள்படும்.
 
வரி 21 ⟶ 24:
6. வாய்வாட் பொய்யா எழினி என்று போற்றப்படும் இவன் நாட்டில் நல்லாட்சி நடத்திவந்தான். ஆடு மாடு மேய்ப்போர் அச்சமின்றிக் காட்டில் தங்கும் வகையில் இவன் குடிமக்களுக்குப் பாதுகாப்பு நல்கிவந்தான். காட்டில் தங்கும்போது விலங்குகள் தாக்காதவாறும், நாட்டிலுள்ள செல்வத்தைப் பகைவர் பறிக்காதவாறும் இவன் பாதுகாப்பு அளித்துவந்தான். இவன் அதியமானின் தகடூரைத் தாக்கியபோது போர்க்களத்திலேயே கொல்லப்பட்டான். அரிசில் கிழார் – புறம் 230
7. அதியமான் மகன் பொகுட்டு எழினிக்கு இரண்டு பகையாம். ஒன்று அவன் தோளை மகளிர் நோக்கம் தாக்குமாம். மற்றொன்று மற்றவர்களோடு சேர்ந்து மகிழ்ந்து உண்ட கையோடு தாக்கிவிடுவானோ என்று அவன் செல்லும் ஊர்களிலெல்லாம் அவனைப் பகைக் கண்ணோடு பார்ப்பார்களாம். ஔவையார் – புறம் 96 ஔவையார் தன்னிடமிருந்த மாக்கிணை என்னும் பறையை முழக்கிக்கொண்டு, விடியல் பொழுதில் கொடும்பூண் எழினி வாயிலில் நின்று அவன் புகழைப் பாடினாராம். பகைவர் கோட்டைகளைக் கைப்பற்றி அவர் நாட்டில் கழுதை ஏர் பூட்டி உழுது வரகும் கொள்ளும் விதைத்தானாம். உடனே வெளிவந்த அவன் பாசிவேர் போல் கிழிந்திருந்த ஔவையின் ஆடைக்கு மாற்றாடையாக நுண்ணூல் கலிங்கம் தந்து விருந்து படைத்தானாம். ஔவையார் – புறம் 392 உப்பு வண்டி மேட்டில் ஏறும்போதும் பள்ளத்தில் இறங்கும்மோதும் முன்னும் பின்னும் கவியாமல் இருப்பதற்காக வண்டியில் சேம-அச்சு என்று ஒரு மரத்தைக் கட்டித் தொங்கவிட்டிருப்பர். எழினி ஔவையைச் சேம-அச்சு போல் பேணிவந்தானாம். ஔவையார் – புறம் 102
==சான்று மேற்கோள்==
 
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எழினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது