இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
 
[[Image:Puebla farmers.jpg|left|thumb|250px|நடுவமெரிக்க உயர்நிலப்பகுதி நிலத்தோற்றம்]]
பல சிறிய தொடர்களைக் கொண்ட சியெரா மாட்ரே மலைத்தொடர் வடக்கு நடுவமெரிக்காவில் இருந்து கொசுத்தாரிக்கா ஊடாகத் தெற்கு நோக்கிச் செல்கிறது. இத்தொடர் எரிமலைகளைக் கொண்டது. சியெரா மாட்ரே தொடரில் செயற்பாடு அற்றனவும், செயற்படுவனவும் ஆகிய 83 எரிமலைகள் உள்ளன. இவற்றுள் 13 மெக்சிக்கோவிலும், 37 குவாத்தமாலாவிலும், 23 எல் சல்வடோரிலும், 25 நிக்கராகுவாவிலும், 3 வடமேற்குக் கொசுத்தாரிக்காவிலும் உள்ளன. இவற்றில் 16 இன்னும் செயற்பாடு உள்ளவையாக இருப்பதாக [[மிச்சிகன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்]] கூறுகிறது. செயற்பாடுள்ள எரிமலைகளில், 5,452 மீட்டர் (17,887 அடி) உயரமான [[போப்போகட்டெப்பெட்டில்]] (Popocatépetl) என்னும் எரிமலையே மிகவும் உயரமானது. [[நகுவாட்டில் மொழி]]ப் பெயரையே இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்த எரிமலை மெக்சிக்கோ நகரில் இருந்து தென்கிழக்கே 70 [[கிலோ மீட்டர்]] (43 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மெக்சிக்கோ - குவாத்தமாலா எல்லையில் அமைந்துள்ள "[[தக்கானா எரிமலை|தக்கானா]]"; குவாத்தமாலாவில் உள்ள "[[தசுமுல்க்கோ எரிமலை|தசுமுல்க்கோ]]", "[[சாந்தமரியா எரிமலை|சாந்தமரியா]]"; எல் சல்வடோரில் அமைந்துள்ள "[[இசால்கோ எரிமலை|இசால்கோ]]"; நிக்கராகுவாவில் உள்ள "[[மொமோட்டோம்போ எரிமலை|மொமோட்டோம்போ]]"; கொசுத்தாரிக்காவில் உள்ள "[[அரேனல் எரிமலை|அரேனல்]]" என்பன நடுவமெரிக்காவில் உள்ள பிற குறிப்பிடத்தக்க எரிமலைகள்.
 
[[Image:Puebla farmers.jpg|left|thumb|250px|நடுவமெரிக்க உயர்நிலப்பகுதி நிலத்தோற்றம்]]
 
[[தெகுவாந்தப்பெக் நிலத்தொடுப்பு]] இங்குள்ள முக்கியமான ஒரு இடக்கிடப்பு அம்சமாக விளங்குகிறது. தாழ்வான சமநிலமான இது, சியெரா மாட்ரே டெல் சூர், சியெரா மாட்ரே டி சியாப்பாசு என்பவற்றுக்கிடையே, சியெரா மாட்ரே மலைத்தொடரைப் பிரிக்கிறது. இந்த நிலத்தொடுப்பின் மிக உயரமான பகுதி கடல் மட்டத்தில் இருந்து 224 மீட்டர் (735 அடி) உயரம் கொண்டது. இத் தொடுப்பே மெக்சிக்கோக் குடாவுக்கும், மெக்சிக்கோவில் உள்ள பசுபிக் பெருங்கடல் கரைக்கும் இடையிலான மிகக் குறைந்த தூரமாகவும் உள்ளது. இத்தூரம் ஏறத்தாழ 200 கிமீ (120 மைல்). இத் தொடுப்பின் வடக்குப் பகுதி சதுப்பு நிலமாகவும், அடர்த்தியான காடுகளினால் மூடப்பட்டு இருந்தாலும், சியெரா மாட்ரே தொடருக்குள் இது மிகக்குறைந்த தூரமாக இருப்பதால், இத் தொடுப்பு, நடுவமெரிக்காவுக்குள் ஒரு முக்கியமான போக்குவரத்து, தொடர்பாடல், பொருளாதாரத் தொடர்பு வழியாக விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது