இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
===ஆறுகளும், ஏரிகளும்===
[[File:Lake Nicaragua.jpg|thumb|250px|நடுவமெரிக்காவின் மிகப்பெரிய ஏரியான நிக்கராகுவா ஏரி]]
வடக்கு மாயன் தாழ்நிலங்களுக்கு வெளியே, நடுவமெரிக்கா முழுதும் ஆறுகள் உள்ளன. பல மிக முக்கியமான ஆறுகளின் வழி நெடுகிலும் பல மனிதக் குடியிருப்புக்கள் உருவாகின. நடுவமெரிக்காவின் மிக நீளமான ஆறு [[உசுமக்கிந்தா]]. குவாத்தமாலாவில் சாலினாசு, பசியன் ஆறு என்பன இணையும் இடத்தில் தொடங்கும் இந்த ஆறு, வடக்கு நோக்கி 970 கிமீ (600 மைல்) ஓடி மெக்சிக்கோ குடாவில் கலக்கின்றது. இவ்வாற்றில் 480 கிமீ (300 மைல்) தூரம் கப்பல்கள் செல்ல முடியும். ரியோ கிரான்டே டி சந்தியாகோ, கிரிசல்வா ஆறு, மோத்தகுவா ஆறு, உலுவா ஆறு, ஒன்டோ ஆறு என்பனவும் இப்பகுதியில் உள்ள குறிப்பிடத்தக்க ஆறுகள். வடக்கு மாயன் தாழ்நிலங்களில், சிறப்பாக யுக்கட்டான் தீவக்குறையின் வடக்குப் பகுதியில் ஆறுகள் எதுவும் கிடையா. அத்துடன் ஏரிகளும் இப்பகுதியில் இல்லை. நிலத்தடி நீரே இப்பகுதியின் முக்கியமான நீர் மூலம் ஆகும்.
 
 
8,264 ச.கிமீ (3,191 ச.மைல்) பரப்பளவு கொண்ட [[நிக்கராகுவா ஏரி]]யே நடுவமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஏரி. [[சப்பாலா ஏரி]] மெக்சிக்கோவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி. எனினும், அசுட்டெக் பேரரசின் தலைநகரான [[தெனோச்சித்தித்லான்|தெனோச்சித்தித்லானைத்]] தன் கரையில் கொண்டிருந்த [[தெக்சுக்கோக்கோ ஏரி]]யே பரவலாக அறியப் பெற்றது. வடக்குக் குவாத்தமாலாவில் பெட்டென் இட்சா ஏரிக் கரையில் அமைந்திருந்த தயாசால் என்னும் நகரமே கடைசிச் சுதந்திர மாயன் நகரமாக 1697 ஆம் ஆண்டுவரை இருந்தது. இதனால், இந்த ஏரியும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. அதித்லான் ஏரி, இசபல் ஏரி, குயிசா ஏரி, லெமோவா ஏரி, மனாகுவா ஏரி என்பன பிற முக்கியமான ஏரிகள்.
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது