கிளைசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
}}
'''கிளைசின்''' (''Glycine'') [குறுக்கம்: Gly (அ) G]<ref>{{cite web | author=IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature | title=Nomenclature and Symbolism for Amino Acids and Peptides | work=Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc | url=http://www.chem.qmul.ac.uk/iupac/AminoAcid/ | accessdate=2007-05-17}}</ref> என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு [[கரிமம்|கரிமச்சேர்மம்]] ஆகும். இதனுடைய வாய்பாடு: NH<sub>2</sub>CH<sub>2</sub>COOH. "பக்கத் தொடரில்" இரண்டு ஹைட்ரசன் அணுக்களை மட்டும் கொண்டுள்ளதால் [[புரதம்|புரதங்களில்]] சாதரணமாகக் காணப்படும் 20 [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களில்]] கிளைசின் மிகவும் சிறியதாகும். இரண்டு பக்கத் தொடர் ஹைட்ரசன் அணுக்களைக் கொண்டுள்ளதால், கிளைசின் அமினோ அமிலமானது நீர்நாட்டமுள்ள மற்றும் நீர்தவிர்க்கும் இரண்டு சூழல்களிலும் பொருந்தக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GGU, GGC, GGA மற்றும் GGG. கிளைசின் வண்ணமற்ற, இனிய [[சுவை|சுவையுள்ள]] [[படிகம்|படிகத்தன்மை]] கொண்ட [[திண்மம்|திடப்]] பொருளாகும். இதற்கு சமச்சீரின்மை (chiral) பண்பு கிடையாது.
 
==தயாரிப்பு மற்றும் முக்கியப் பண்புகள்==
ஹென்றி பிரகோன்னாட் என்னும் பிரெஞ்சு வேதியியலர் மற்றும் மருந்தாளுநர் 1820-ல் ஜெலாட்டினை கந்தக அமிலத்துடன் சேர்த்துக் கொதிக்கவைத்து கிளைசினைக் கண்டறிந்தார்<ref>{{cite book |author= R.H.A. Plimmer |editor= R.H.A. Plimmer & F.G. Hopkins |title= The chemical composition of the proteins |url= http://books.google.com/?id=7JM8AAAAIAAJ&pg=PA112 |accessdate= January 18, 2010 |edition= 2nd |series= Monographs on biochemistry |volume= Part I. Analysis |origyear= 1908 |year= 1912 |publisher= Longmans, Green and Co. |location= London|page= 82}}</ref>.
 
[[தொழிற்சாலை|தொழிலகங்களில்]] குளோரோ அசெடிக் அமிலத்துடன் [[அமோனியா|அமோனியாவை]] வினைப்படுத்தி கிளைசின் தயாரிக்கப்படுகின்றது<ref>{{OrgSynth | first1 = A. W. | last1 = Ingersoll | first2 = S. H. | last2 = Babcock | title = Hippuric acid | prep=cv2p0328 | volume = 12 | pages = 40 | year = 1932 | collvol = 2 | collvolpages = 328}}.</ref>.
:ClCH<sub>2</sub>COOH + 2 NH<sub>3</sub> → H<sub>2</sub>NCH<sub>2</sub>COOH + NH<sub>4</sub>Cl
இம்முறையில் சுமார் 15 மில்லியன் கிலோகிராம் கிளைசின் ஒரு வருடத்திற்கு உற்பத்திச் செய்யப்படுகிறது<ref>Karlheinz Drauz, Ian Grayson, Axel Kleemann, Hans-Peter Krimmer, Wolfgang Leuchtenberger, Christoph Weckbecker “Amino Acids” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2007, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a02_057.pub2}}</ref>.
 
இதனுடையக் காடித்தன்மை எண்கள்: 2.35 மற்றும் 9.78. எனவே, அமிலக்காரக் குறியீடு (pH) 9.78 -ட்டிற்கு மேல் பெரும்பாலான கிளைசின் [[அமைன்]] எதிரயனிகளாக உள்ளது, H<sub>2</sub>NCH<sub>2</sub>CO<sub>2</sub><sup>-</sup>. அமிலக்காரக் குறியீடு (pH) 2.35 -க்கு கீழே கிளைசின் [[கரைசல்|கரைசல்கள்]] பெரும்பாலும் கார்பாக்சிலிக் அமில நேரயனிகளாகவே உள்ளது, H<sub>3</sub>N<sup>+</sup>CH<sub>2</sub>CO<sub>2</sub>H. இதனுடையச் சமமின்புள்ளி (pI): 6.06.
 
கிளைசின் கரைசல்களில் இருமுனை [[அயனி]] வடிவத்தில் உள்ளது. இவ்வடிவத்தில், பல [[அணு|அணுக்களிலும்]] உள்ள பகுதி மின்னூட்டங்களை காஸ்டெய்கர் மின்னூட்ட முறையில் கணக்கிடும்போது வரும் மதிப்புகள்: N (+0.2358), H (N- உடன் இணைந்தது) (+0.1964), ஆல்ஃபா-C (+0.001853), H (ஆல்ஃபா-C-யுடன் இணைந்தது) (+0.08799), கார்போனைல் C (+0.085) மற்றும் கார்போனைல் O (-0.5445).
 
==உயிரித்தொகுப்பு ==
கிளைசின், நம் [[உணவு|உணவில்]] தேவையில்லாதது. 3-பாஸ்போ கிளிசரேட்டிலிருந்து பெறப்பட்ட [[செர்ரீன்|செரின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்திலிருந்து]] நம் [[உடல்]] [[உயிர்வேதியியல்]] முறையில் கிளைசினைத் தொகுத்துக் கொள்கிறது. பெரும்பாலான [[உயிரினம்|உயிரினங்களில்]] [[செர்ரீன்|செரின்]] ஹைட்ராக்சி இடமாற்றி [[நொதி]] பிரிடாக்சால் பாஸ்பேட் என்னும் துணைக்காரணியின் உதவியுடன் [[வினையூக்கி|வினையூக்கியாகச்]] செயல்பட்டு இவ்வுருமாற்றத்தை நிகழ்த்துகிறது:<ref>{{cite book |author= A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}</ref>
: செரின் + டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் → கிளைசின் + ''N<sup>5</sup>'',''N<sup>10</sup>''-மெத்திலீன் டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + H<sub>2</sub>O
 
[[முதுகெலும்பிகள்|முதுகெலும்புயிரிகளின்]] [[கல்லீரல்|கல்லீரலில்]] கிளைசின் தொகுப்பி (மறு பெயர்: கிளைசின் பிளவு நொதி) என்னும் [[நொதி|நொதியால்]] கிளைசின் தொகுக்கப்படுகின்றது. இத்தொகுப்பு மாற்றம் எளிதில் [[மீளுருவாக்கம்|மீளுறும் தன்மையுள்ளது]]<ref>{{cite book |author= A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}</ref>
: CO<sub>2</sub> + NH<sub>4</sub><sup>+</sup> + ''N<sup>5</sup>'',''N<sup>10</sup>''-மெத்திலீன் டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + NADH + H<sup>+</sup> → கிளைசின் + டெட்டிரா ஹைட்ரோஃபோலேட் + NAD<sup>+</sup>
 
பெரும்பாலானப் [[புரதம்|புரதங்கள்]] கிளைசினைச் சிறிய அளவிலேயே கொண்டுள்ளன. ஆனால், 35% கிளைசினைக் கொண்ட கொலாஜென் புரதம் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காகும்<ref>{{cite book |author= A.L. Lehninger, D.L. Nelson and M.M.Cox |editor= |title= Lehninger principles of biochemistry |url= http://books.google.com/?id=qM1pQgAACAAJ |accessdate= July 25, 2011 |edition= 5th |series= |origyear= |year= 2008 |publisher= W.H. Freeman and Co.|location= New York|page= }}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிளைசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது