லூக்கா நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: bar:Evangelium noch Lukas; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''லூக்கா நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் மூன்றாவது நூலாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Gospel_of_Luke லூக்கா]</ref>. இது [[இயேசு கிறித்து|இயேசுவின்]] வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள மூன்றாவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் '''லூக்கா எழுதிய நற்செய்தி''', Κατὰ Λουκᾶν εὐαγγέλιον(Kata Loukan Euangelion = The Gospel according to Luke), என்பதாகும்.
 
 
மற்ற நற்செய்தி நூல்களான [[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயு நற்செய்தி]],[[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு நற்செய்தி]] என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து [[ஒத்தமை நற்செய்தி நூல்கள்]] (Synoptic Gospels) <ref>[http://en.wikipedia.org/wiki/Synoptic_Gospels ஒத்தமை நற்செய்திகள்] </ref> என்று அழைக்கப்படுவதும் உண்டு.
 
 
வரிசை 13:
லூக்கா தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு இந்நூலைப் படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்கள் இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்று்ப் பின்னணியோடும் யாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக் 1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயச் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.
 
== நூலின் ஆசிரியர் ==
 
இந்நற்செய்தியின் ஆசிரியர் ''கடவுள் பயமுள்ள'' ஒரு பிற இனத்தவராக இருந்திருக்க வேண்டும். அதாவது, அவர் யூத சயமத்தால் கவரப்பட்டார்; யூதரின் தொழுகைக் கூடங்களுக்கு அவர் சென்றிருப்பார்; யூத சமயத்தை முழுமையாகத் தழுவாவிட்டாலும் அம்மரபோடு அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்.
 
 
கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே கிறிஸ்தவ மரபு, இந்நூலின் ஆசிரியர் ''லூக்கா'' எனவும், இவர் தூய பவுலின் உடன் பணியாளராக இருந்தார் எனவும் நிலைநாட்டியுள்ளது. [[கொலோசையர் (நூல்)|கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில்]] பவுல் ''அன்பார்ந்த மருத்துவர் லூக்கா...உங்களை வாழ்த்துகின்றார்'' எனக் குறிப்பிடுகிறார் (கொலோ 4:14). பவுல் [[பிலமோன் (நூல்)|பிலமோனுக்கு எழுதிய கடிதத்தில்]] லூக்காவைக் குறிப்பிடுகிறார் (வசனம் 24). அதுபோலவே, [[2 திமொத்தேயு (நூல்)|2 திமொத்தேயு]] 4:11இலும் பவுல், ''என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்'' என்று குறிப்பிடுகிறார்.
 
லூக்கா நற்செய்தியும் புதிய ஏற்பாட்டு நூலான [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகளும்]] ஒரே ஆசிரியரின் எழுதுகோலிலிருந்து பிறந்தனவே என்பது அறிஞர்களின் ஒருமனதான முடிவு. திருத்தூதர் பணிகள் நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாம் நேரடியாகக் கண்டதும் பங்கேற்றதுமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். ''நாங்கள் பயணம் செய்தோம்'', ''நாங்கள் தங்கியிருந்தோம்'', ''நாங்கள் போதித்தோம்''(காண்க திப 16:10-17; 20:5-15; 21:1-28:16; 27-28) [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள்]] என்னும் கூற்றுகள் நூலின் ஆசிரியர் தூய பவுலோடு பயணம் செய்த உடன்பணியாளர் என்பதைக் காட்டுகின்றன.
 
 
வேறு சில அறிஞர்கள் மாற்றுக் கருத்துத் தெரிவிக்கின்றனர். ''நாங்கள்'' என நூலாசிரியர் கூறும்போது தன்னையும் கூடவே இணைத்துச் சொல்கிறார் எனப் பொருள்கொள்ள வேண்டிய தேவை இல்லை; ஏனென்றால், கடல் பயணத்தை விவரிக்கும்போது நூலாசிரியர் தன்னையும் பயணிகளோடு இணைத்துப் பேசுவது கிரேக்க-உரோமைய இலக்கிய மரபு. அம்மரபையே லூக்காவும் பின்பற்றியிருக்கிறார் என்பது இந்த அறிஞர் கூற்று.
 
 
வரிசை 29:
 
 
== நூல் எழுதப்பட்ட காலம், இடம் ==
 
லூக்கா நற்செய்தி கி.பி. 85-90 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பெரும்பான்மை அறிஞரின் கருத்து. இந்தக் கருத்துக்கு அடிப்படையாக கி.பி. 70இல் எருசலேம் நகர் தீத்துவின் தலைமையில் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்ட செய்தியை லூக்கா வழங்கியிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. எருசலேம் அழிந்துபோகும் என இயேசு முன்னறிவிக்கிறார் (லூக் 19:41-44; 21:20-24). இந்த ''முன்னறிவிப்பு'' உண்மையிலே ஏற்கெனவே நடந்துமுடிந்த அழிவைப் பின்னோக்கிப் பார்ப்பதாக உள்ளது என்பது அறிஞர் கருத்து. [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு நற்செய்தி]] நூலில் காணப்படும் எருசலேம் கோவில் பற்றிய [[தானியேல் (நூல்)|தானியேல்]] மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப் பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5,20; 13:35). எனவே இந்நூல் கி.பி. 70க்குப் பின்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
வரிசை 35:
லூக்கா நற்செய்தி எந்த நகரில் எழுதப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிரேக்க நாட்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து. வேறு சிலர் அந்தியோக்கியா, அல்லது உரோமை நகரிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம் என்பர்.
 
== நூலின் உள்ளடக்கம்: பகுப்பாய்வு ==
 
[[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா நற்செய்தியின்]] உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பகுப்பாய்வு செய்து தொகுக்கலாம்:
வரிசை 47:
 
 
எனவே, ''நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை... ஒழுங்குபடுத்தி எழுத'' லூக்கா முன்வருகிறார். அவர் குறிப்பிடும் ''நிகழ்ச்சிகள்'' இயேசு பற்றிக் கிறித்தவ சமூகம் அறிவித்துவந்த மரபைக் குறிக்கும். நூல் ''தியோபில்'' என்பவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. கிரேக்க மொழியிலுள்ள இச்சொல் ''கடவுளின் அன்பர்'' எனப் பொருள்படும். இது லூக்காவை ஆதரித்த ஒரு புரவலராக இருக்கலாம் அல்லது பொதுவான பெயராக நின்று, கிறித்தவ நம்பிக்கை கொண்ட எவரையும் குறிக்கலாம். லூக்கா தம் நூலை எழுதுவதற்குப் பிற மூல ஆதாரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். அவற்றுள் நிச்சயமாக மாற்கு நற்செய்தியும், “Q” என்று அறியப்படும் ஊக ஏடும்.உள்ளடங்கும். இங்கே குறிப்பிடப்படுகின்ற “Q” என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்று பொருள் <ref>[http://en.wikipedia.org/wiki/Synoptic_Gospels ஒத்தமை நற்செய்திகள்]</ref>. நூல் எழுதப்பட்டதன் நோக்கமும் தரப்படுகிறது. அதாவது, தியோபில் ''கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு'' லூக்கா நூலை எழுதினார்.
 
 
லூக்கா கூறுகின்ற ''முறையான வரலாறு'' மாற்கு நற்செய்தியில் தரப்படுகின்ற பொது உருஅமைப்பைத் தழுவி அமைகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட தயாரிப்புக் காலத்துக்குப் பின் (லூக் 1:5-4:13), [[இயேசு கிறித்து|இயேசு]] கலிலேயாவில் பொதுப் பணி நிகழ்த்துகிறார் (4:14-9:50); பின் எருசலேம் நகரை நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார் (9:51-19:44); எருசலேமில் பணியில் ஈடுபடுகிறார் (19:45-21-38); எருசலேமில் பல துன்பங்கள் அனுபவித்து அங்கேயே சாவை எதிர்கொள்கிறார் (அதிகாரங்கள் 22-23); சாவிலிருந்து மீண்டும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுந்து]], எருசலேமிலும் சுற்றுப்புறங்களிலும் சீடர்களுக்குத் தோன்றுகிறார் (அதிகாரம் 24).
 
 
வரிசை 86:
 
 
இயேசுவின் எருசலேம் பயணம் தொடர்வதை அவ்வப்போது லூக்கா வாசகர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே செல்கிறார். எடுத்துக்காட்டாக, 9:51; 13:22, 33; 17:11; 18:31 ஆகிய இடங்களைக் காண்க. பயணம் செல்லும் வேளையில் இயேசு தம் சீடருக்குப் போதனை வழங்கிக்கொண்டே செல்கிறார்; இயேசுவின் சீடராக மாறுவது எதில் அடங்கியிருக்கிறது ("சீடத்துவம்") <ref>[http://en.wikipedia.org/wiki/Discipleship சீடரின் பண்புகள்]</ref> என விளக்கிச் சொல்கின்றார். இப்போதனைப் பகுதியில் லூக்கா “Q” ஊக ஏட்டிலிருந்தும் பிற மூலங்களிலிருந்தும் பலவற்றைச் சேர்த்துள்ளார். எருசலேமுக்குச் செல்லும் இயேசு வெளிக்கட்டாயத்தினால் அங்குப் போகவில்லை, மாறாக, தாமாகவே விரும்பிச் செல்கிறார்; தம்மைப் பின்செல்ல விரும்புவோரும் தம்மோடு இணைந்து பயணத்தில் சேர்ந்துகொள்ளக் கேட்கிறார் (காண்க 9:51-62).
 
 
வரிசை 122:
 
 
== லூக்கா காட்டும் இயேசு யார்? ==
 
 
வரிசை 134:
 
 
== இயேசுவையும் பவுலையும் ஒப்புமைப்படுத்தும் லூக்கா ==
 
 
வரிசை 140:
 
 
அதாவது, இயேசு, பவுல் ஆகிய இருவருமே பிற இனத்தாரின் மீட்புக்குத் துணையாவர் என்றும், இருவருமே துன்பப்பட வேண்டியிருக்கும் என்றும் லூக்கா காட்டுகிறார் (காண் லூக் 2:29-35; திப 9:15-16). இயேசு, பவுல் இருவருமே எருசலேமுக்குப் போகத் துணிவோடு முனைந்து நின்றதையும் அங்கே அவர்கள் பெருவருத்தம் தருகின்ற துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் லூக்கா எடுத்துரைக்கிறார் (காண் லூக் 9:51; திப 19:21). இயேசுவும் பவுலும் தாம் துன்புற வேண்டியிருக்கும் என்பதை முன்னறிவிக்கின்றனர் (லூக் 9:22, 44-45; திப 20:22-24; 21:10-14).
 
 
வரிசை 149:
 
 
== இன்றைய உலகுக்கு லூக்கா வழங்கும் செய்தி ==
 
 
வரிசை 164:
 
 
கடவுளின் ஆட்சியில் மனித மதிப்பீடுகள் தலைகீழாகப் புரட்டிவிடப்படும் என்ற கருத்து லூக்கா நற்செய்தியில் அழுத்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, எலிசபெத்தை சந்தித்த போது மரியா உரைத்த பாடலைக் கூறலாம் (1:46-55). அதில், மரியா [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|இயேசுவின் பிறப்பைக்]] கொண்டாடுகிறார். அதேசமயம் கடவுள் ''வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' (1:52) என மரியா போற்றுகின்றார். அதுபோலவே, சமவெளிப் பொழிவில் ''ஐயோ! உங்களுக்குக் கேடு!'' என்று வரும் பகுதியில் (6:20-26) மனித மதிப்பீடுகள் புரட்டிப்போடப்படுவதைக் காண்கின்றோம்.
 
 
வரிசை 191:
* இயேசு முதல் சீடரை அழைத்தல் (5:1-11)
* [[கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை|பழைய ஆடையும் பழைய தோற்பையும் பற்றிய உவமை]] (5:36)
* சமவெளிப் பொழிவு (6:20-26)
* [[இரண்டு கடன்காரர் உவமை|கடன்பட்டோர் பற்றிய உவமை]] (7:40-43)
* [[விதைப்பவனும் விதையும் உவமை|விதைப்பவர் உவமை]] (8:4-15)
வரிசை 228:
* இயேசு விண்ணேற்றம் அடைதல் (24:50-53)
 
== லூக்கா நற்செய்தியின் உட்பிரிவுகள் ==
 
<big>'''நூலின் பிரிவுகள்'''</big>
வரிசை 268:
|}
 
== ஆதாரங்கள் ==
<references/>
== உசாத்துணை ==
வரிசை 278:
[[ar:إنجيل لوقا]]
[[arc:ܟܪܘܙܘܬܐ ܕܠܘܩܐ]]
[[bar:Evangelium noch Lukas]]
[[bg:Евангелие от Лука]]
[[bo:༄༅།། ལུ་ཀཱ་ཡིས་བྲིས་པའི་འཕྲིན་བཟང་བཞུགས་སོ།།]]
"https://ta.wikipedia.org/wiki/லூக்கா_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது