போனீசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Փյունիկիա
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: jv:Bangsa Fenisia; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox Former Country
|native_name = [[Imageபடிமம்:Phoenician kaph.svg|12px|��‏]][[Imageபடிமம்:Phoenician nun.svg|12px|��‏]][[Imageபடிமம்:Phoenician ayin.svg|12px|��‏]][[Imageபடிமம்:Phoenician nun.svg|12px|��‏]]
{{Polytonic| Φοινίκη}}
|conventional_long_name = பீனீசியா
கேனன்
Canaan
|common_name = பீனீசியாவின்
|national_motto =
வரிசை 21:
|image_map = Phoenicia map-en.svg
|image_map_caption = பீனீசியாவின் வரைபடம்
|capital = [[பிப்லசு]]
(கிமு 1200 – கிமு 1000)
டைர்
(கிமு 1000 - கிமு 333)
|latd= 34 |latm= 07 |latNS= N |longd= 35 |longm= 39 |longEW= E
|common_languages = [[பீனீசிய மொழி|பீனீசியம்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[பியூனிக் மொழி|பியூனிக்]]
வரிசை 45:
|stat_pop1 = 200,000

பண்டைய உலகின் நிலப்பரப்புக்களுள் '''போனீசியா''' அல்லது '''பீனீசியா''' (''Phoenicia'', பிரித்தானிய {{pronEng|fɨˈnɪʃə}} அமெரிக்க {{pronEng|fəˈniːʃə}}; {{lang-el|Φοινίκη}}: Phoiníkē) என்ற நிலப்பகுதி பல வகைகளிலும் புகழ்பெற்றிருந்தது. [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலின்]] கிழக்குக் கரையோரத்தில், இன்றைய [[லெபனான்]] நாடு அமைந்திருக்கும் பகுதியில் இப்பிராந்தியம் அமைந்திருந்தது. சுமார் 3,220 கிலோமீற்றர் நீளமும், 8 முதல் 25 கிலோமீற்றர் வரையான அகலமும் கொண்டிருந்த இந்நிலப் பகுதியின் கிழக்கு எல்லையாக லெபனான் மலைத்தொடர் இருந்தது. கார்மல் மலையே அதன் தெற்கெல்லையாக இருந்தது. வடக்கில், தற்போது 'கபீர்' என அழைக்கப்படும் பண்டைய எலுயிதீரஸ் (Eleutherus) நதி எல்லையாக அமைந்திருந்தது.

== நகர - இராச்சியங்களின் கூட்டு ==
போனீசியாவில் வாழ்ந்தவர்கள் ஒரேயின நாகரிகத்தைக் கொண்டவர்களாக இருந்ததோடு தம்மை ஒரே தேசத்தவர்களாகவே கருதினர். எனினும், போனீசியா என்பது தனியொரு தேசமாக இருக்கவில்லை. மாறாக நகர - இராச்சியங்கள் பலவற்றின் கூட்டமொன்றாகவே அது காணப்பட்டது. இந்நகர - இராச்சியங்களிலொன்று பொதுவாக மற்றையவற்றின் மீது ஆதிக்கம் செலுத்திவந்தது. இவ்வாறு ஆதிக்கம் செலுத்தியவற்றுள் [[டைர்]] (தற்போதைய சுர்), [[சைடன்]] (தற்போதைய 'சயிதா') என்ற இரண்டு இராச்சியங்களும் குறிப்பிடத்தக்கவை.

== செமிற்றிக் இனம் ==
[[படிமம்:Anthropoid sarcophagus discovered at Cadiz - Project Gutenberg eText 15052.png|போனீசியா கடவுள்|thumb|right]]
போனீசியாவில் வாழ்ந்தவர்கள் [[செமிட்டிக் மொழிகள்|செமிற்றிக்]] இனத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கி.மு. 2500ம் ஆண்டளவில் (4500 ஆண்டுகளுக்கு முன்) தமது குடியிருப்புக்களை மத்தியதரைக் கரையோரத்தில் அமைந்திருக்கலாம் என வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டியுள்ளன. இவர்களது வரலாற்றின் ஆரம்ப காலத்தில் பபிலோனியாவிலிருந்த சுமேரிய மற்றும் அக்காடிய கலாசாரங்களின் செல்வாக்குக்கு இவர்கள் உட்பட்டிருந்தனர்.

== போனீசியா கிளர்ச்சி ==
கி.மு. 1800 அளவில் எகிப்து போனீசியாவைக் கைப்பற்றிக் கொண்டது. பிற்காலத்தில் எதிரிகளின் தாக்குதல்கள் காரணமாக எகிப்திய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போனீசியா நகர்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கின. இதன் விளைவாக கி.மு. 1200 ஆகும்போது போனீசியா எகிப்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டது.

== போனீசியர்களின் எழுச்சி ==
சுயாட்சி ஏற்பட்ட பின்னர் பண்டைய உலகின் மிக முக்கியமான வர்த்தகர்களாகவும், மாலுமிகளாகவும் போனீசியர்கள் புகழ்பெறலாயினர். போனீசிய நகர்களின் கப்பற் கூட்டங்கள் மத்தியத்தரைக் கடலிலும் அத்திலாந்திக் சமுத்திரத்திலும் உலாவரலாயின. இதன் பலனாகப் பல குடியேற்றப் பகுதிகளும் போனீசிய நகர்களுக்கு உரித்தாகின.

== போனீசியர்களின் வீழ்ச்சி ==
கி.மு. 8ம் நூற்றாண்டில் [[அசிரியா|அசிரியர்]]கள் போனீசியாவைக் கைப்பற்றிக் கொண்டனர். கி.மு. 539ல் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக போனிசியா மாறியது. மசிடோனிய அரசனான [[மகா அலெக்சாந்தர்]] கி.மு 333ல் பாரசீகத்தைத் தோற்கடித்து போனீசிய நகர்களை மசிடோனியாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்.

இத்தோல்வியின் பின் பீனீசியர்கள் தமது தனித்துவத்தை இழக்கத் தொடங்கினர். அவர்கள் படிப்படியாக கிரேக்க - மசிடோனியப் பேரரசுக்குள் உள்வாங்கப்பட்டனர். கி.மு. 64ல் போனீசியப் பிராந்தியம் [[ரோமப் பேரரசு|உரோமப் பேரரசின்]] [[சிரியா]] என்ற மாகாணமாக மாற்றப்பட்டது. அத்தோடு போனீசியா என்ற பெயரே உலக அரங்கிலிருந்து மறைந்துபோயிற்று.

== அரிச்சுவடியின் அறிமுகம். ==
மனித நாகரிகத்துக்கு போனீசியா வழங்கிய மாபெரும் பங்களிப்பு அரிச்சுவடியின் அறிமுகமாகும். எழுத்து மொழிக்குரிய அரிச்சுவடியை முதலில் பயன்படுத்தியவர்கள் இவர்களே. இன்றைய மொழிகள் பலவற்றின் அரிச்சுவடிகள் போனீசியர்களின் அரிச்சுவடியிலிருந்தே பரிணாமம் அடைந்துள்ளன.

== கண்டுபிடிப்புகள் ==
Tyrian purple என்ற ஊதா நிறச் சாயமும் கண்ணாடியும் பீனீசியர்களின் கண்டுபிடிப்புக்களாகும். துணி வகைகள், சாயங்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் உலோகவேலை, கண்ணாடி தயாரித்தல் முதலியவற்றிலும் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களாக போனீசியர்கள் திகழ்ந்தனர்.

== வரலாற்றுச் சின்னங்கள் ==
போனீசிய வரலாற்றுச் சின்னங்களின் இடிபாடுகளை இன்றும் லெபனானின் காணக்கூடியதாக இருக்கிறது.

== மேற்கோள்கள் ==
<references/>

== உசாத்துணை ==
அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை

வரிசை 113:
[[it:Fenici]]
[[ja:フェニキア]]
[[jv:Bangsa Fenisia]]
[[ka:ფინიკია]]
[[ko:페니키아]]
"https://ta.wikipedia.org/wiki/போனீசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது