சுற்றிழுப்பசைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: he
சி lnk
வரிசை 1:
[[Image:Schlauchpumpe-lineare-Bauart-transparant-indizert-bewegt.gif|thumb|400px|சுற்றிழுப்பசைவு எக்கியின் செயல்முறை விளக்கப்படம்- பக்கவாட்டுப் படத்தில் ஒரு குழாய் மீது ஈரிடங்களில் தட்டுக்கள் அழுத்தியவாறு உருள்வதைக் காணலாம்; இதனால் ஏற்படும் அலை போன்ற சுருங்கி விரிதலினால் குழாயுள் பொருள் நகர்கிறது. இதன் முன்நோக்கிய வரைபடம் இடதுபுறம் உள்ளது.]]
'''சுற்றிழுப்பசைவு''' (''peristalsis'') என்பது அடுத்தடுத்து நிகழும் தசைச்சுருக்கங்களால் ஒரு குழாய் வழியாக ஏற்படும் பொருட்களின் நகர்ச்சியைக் குறிக்கும். [[விலங்கு]]களின் [[உணவுக்குழாய்]] வழியே [[உணவு]] நகர்தல் இம்முறையின் பொதுவான எடுத்துக்காட்டு ஆகும். [[முட்டைக் குழாய்]] (''oviduct'') வழியே [[கருவுறு முட்டை]]கள் நகர்தல், [[சிறுநீரக நாளம்]] (''ureter'') வழியாக [[சிறுநீரகம்|சிறுநீரகத்திலிருந்து]] [[சிறுநீர்ப்பை]] வரை [[சிறுநீர்]] நகர்தல், [[புணர்ச்சிப் பரவசநிலை]]யின் போது [[விந்து]] [[விந்து தள்ளல்|தள்ளப்படுதல்]] முதலியவை இவ்வசைவினால் தான்.
 
இவ்வசைவு ஒரு அலை போன்ற தோற்றம் தரும். ஓரிடத்தில் ஏற்படும் சுருக்கத்தின் விளைவாக குழாயுள் இருக்கும் பொருள் சற்று முன்னே நகர்கிறது. இதன் பின், அந்த நகர்ந்த இடத்தில் குழாய் சுருங்குவதால், அது மேலும் நகர்த்தப்படுகிறது. இப்படியாக ஓரொழுங்குட்டன் ஏற்படும் சுருங்கி விரிதலினால் உணவு முதலிய பொருட்களை நகர்த்த முடிகிறது. இந்நகர்வு அதன் இயல்பு காரணமாக [[புவி ஈர்ப்பு விசை]]க்கு எதிராகக் கூட செயல்பட முடியும். இதே அடிப்படையில் இயங்கும் [[எக்கி]] அல்லது [[இறைப்பி]]யை [[சுற்றிழுப்பசைவு எக்கி]] எனக் குறிப்பிடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றிழுப்பசைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது