எடுவார்ட் மனே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
1853-56 வரை ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, டச்சு ஓவியரான பிரான்ஸ் ஹால்ஸ், ஸ்பானிய ஓவியர்களான திகோ வேலாஸ்குயிஸ், பிரான்ஸிஸ்கோ ஜோஸி டி கோயா ஆகியோரின் ஓவியங்களை உன்னிப்பாக கவனித்து வந்தார்.
 
1856-இல் மனே தமது சொந்த ஓவியக் கூடத்தைத் தொடங்கினார். இக்காலகட்டத்தில், தளர்ச்சியான தூரிகையைக் கொண்டு எளிய நடையில் ஓவியங்களைத் தீட்டினார். குஸ்தாவ் குர்பெத் என்ற ஓவியரின் அப்போதைய யதார்த்தப் பாணி ஓவியத்தை மனே பின்பற்றினார். அவர் The Absinthe Drinker (1858–59) என்ற ஓவியத்தை தீட்டினார். அத்துடன் பிச்சைக்காரர்கள், பாடகர்கள், நாடோடிகள், உணவுவிடுதியில் மக்கள், காளைமாட்டுச் சண்டை போன்ற ஓவியங்களையும் அவர் தீட்டினார். அவர்தம் தொடக்க காலத்தில், மதம், புராணம், வரலாறு சம்பந்தப்பட்ட ஓவியங்களை அவ்வளவாக தீட்டவில்லை எனலாம். உதாரணம், தற்போது சிகாகோ, ஆர்ட் இன்ஸ்டிடியுட்டில் உள்ள ''கிறிஸ்ட் மாக்ட்'' என்ற ஓவியம், நியுயார்க், மெட்ரோபாலிடன் மியுசியம் ஆஃப் ஆர்ட்டில் உள்ள ''கிறிஸ்ட் வித் ஏஞ்சல்ஸ்'' ஆகியவற்றை மட்டும் உதாரணமாகச் சொல்லலாம்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எடுவார்ட்_மனே" இலிருந்து மீள்விக்கப்பட்டது