பிரேட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
கர்தினல்களின் பிரேட்டாக்களில் குஞ்சம் இருப்பதில்லை. ஊதா நிறக் குஞ்சம் கொண்ட பிரேட்டாக்கள் மேற்றிராணிமாருக்கு உரியவை. வத்திக்கானில் குருமாருக்குள் உயர்ந்த தரத்தில் உள்ளவர்கள் (prelates) சிவப்புக் கொஞ்சம் கொண்ட கறுப்புத் தொப்பியை அணிவர். [[மறை மாவட்டம்|மறை மாவட்டக்]] குருமார் அணியும் பிரேட்டாவில் கறுப்புக் குஞ்சம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருப்பதுண்டு. குருத்துவ மாணவர்கள் குஞ்சம் இல்லாத பிடேட்டாக்களை அணிவதற்கே உரித்துடையவர்கள், எனினும் இதற்கு முறைப்படியான விதிகள் எதுவும் இல்லை. பெனடிக்டியர், பிரான்சிசுக்கியர், டொமினிக்கியர்களைப் போல் மடங்களைச் சார்ந்த குருமாரும், சந்நியாசிகளாக இருப்பவர்களும் தமக்கே உரித்தான வழக்கங்களைக் கொண்டிருப்பதுடன், பிரேட்டாக்களை அவர்கள் அணிவது இல்லை. எனினும், பிரிமொன்ட்ரி ஒழுங்கைச் (Order of Prémontré) சேர்ந்த குருமார்களில் சிலர் வெண்ணிறப் பிரேட்டாக்களை அணிவது உண்டு. [[யேசு சபை]]யினர் போன்ற மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பிந்திய கிறித்தவ ஒழுங்குகள் சிலவற்றைச் சேர்ந்த குருமார்களிற் சில தரத்தினர் பொதுவாகக் குஞ்சம் இல்லாத கருநிறப் பிரேட்டாக்களை அணிகின்றனர்.
 
 
இரண்டாவது வத்திக்கான் உலகக் கிறித்தவ அவை அமர்வுக்குப் பின்னர் குருமார்களுடைய உடைகள் தொடர்பான விதி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களினால் பிரேட்டாவின் பயன்பாடு ஒழிந்துவிடவில்லை. வழிபாட்டில் இருக்கும்போது அணியும் சரியான தலையணியாக இது இன்றும் பயன்பட்டு வருகிறது. எனினும், இதை விரும்பினால் மட்டும் அணியும் வகையில் மாற்றம் செய்துள்ளனர். கர்தினால்களும், மேற்றிராணிமாரும் இதைப் பயன்படுத்தி வந்தாலும், குருமார்கள் இதனைக் குறைவாகவே பயன்படுத்தி வருகின்றனர். சில குருமார்கள், திறந்த வெளியில் இடம்பெறும் இறந்தவர்களை அடக்கம் செய்தல், ஊர்வலங்கள், கூட்டு வழிபாடுகள் போன்றவற்றின் போது பிரேட்டாக்களை அணிகின்றனர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பிரேட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது