குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குடியேற்றக் காலத்துக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Pictograph jqjacobs.jpg|thumb|200px|தென்கிழக்கு உத்தாவில் உள்ள பாறை ஓவியம்]]
'''குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்''' என்பது அமெரிக்கக் கண்டங்களில் கொலம்பசுக்கு முந்திய கால கட்டங்களில் அக்காலத்து ஓவிய மரபுகளைப் பின்பற்றி வரையப்பட்ட [[ஓவியம்|ஓவியங்களைக்]] குறிக்கும். ஐரோப்பியர்கள் அமெரிக்காக் கண்டத்தைக் கண்டுபிடித்து அங்கே தமது குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்ட காலத்துக்கு முன்னும், பின்னும்; அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென்னமெரிக்கா, கரிபியன் தீவுகள் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தாயக மக்களின் பண்பாடுகள் பல வகையான காட்சிக் கலைகளை உருவாக்கியுள்ளன. இவற்றுள் ஓவியங்களும் அடங்குகின்றன. இவ்வோவியங்களை அவர்கள், [[துணி]], விலங்குத் தோல், பாறை, முகத்தையும் உள்ளடக்கிய மனித உடற் பகுதிகள், [[வெண்களி]]ப் பொருட்கள், கட்டிடச் [[சுவர்]]கள், [[மரப் பலகை]]கள், போன்ற கிடைக்கக்கூடியனவும் பொருத்தமானவையுமான பல வகையான மேற்பரப்புக்களில் வரைந்துள்ளனர். ஆனால், அழியக்கூடிய பொருட்களான துணி போன்றவற்றில் வரைந்த ஓவியங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. நீண்ட காலம் நிலைத்து இருக்கக்கூடிய வெண்களிப் பாண்டங்கள், சுவர்கள், பாறை மேற்பரப்புகள் போன்றவற்றில் வரையப்பட்ட ஓவியங்களிற் பல இன்றும் கிடைக்கின்றன.