டைரனொசோரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fo:Tyrannosaurus rex
No edit summary
வரிசை 28:
டைரனசோரசு தெரொபோடா [[தொன்மா]]க்களின் [[பேரினம் (உயிரியல்)|பேரினமாகும்]]. இப்பேரினத்தின் பிரபலமான [[இனம் (உயிரியல்)|இனமான]] டி.ரெக்சு (T. rex) பொதுக்கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது. டைரனசோரசு இன்றைய மேற்கு அமெரிக்கா முழுவதும் வாழ்ந்ததிற்கான புதைப்படிவ ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. டைரனசோரசின் புதைபடிவங்கள் 68 முதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பல்வேறுபட்ட பாறைப்படிவுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. கிரேடேசியசு-டேர்சரி அழிவுக்கு முன்னதாக வசித்த பறக்க முடியாத [[பறவை]] தொன்மாக்களில் ஒன்றாகும்.
 
டைரனசோரிட்டுக்களைப் போலவே டைரனசோரசும் இருகாலி [[ஊனுண்ணி]]யாகும். அதன் பெரிய தலையின் எடை அதன் நீளமான வாலினால் சமன் செய்யப்பட்டது. பெரிய ஆற்றல் மிக்க பின்னங்கால்களோடு ஒப்பிடுகையில் அதன் முன்னங்கால்கள் சிறியவையாகும். இருப்பினும் அவற்றின் அளவுடன் ஒப்பிடுகையில் ஆற்றல் மிக்கவையாக காணப்பட்டன. மேலும் முன்னங்கால்களில் இரண்டு விரல்களும் மூன்றாவது பண்டெச்ச விரலும் காணப்பட்டன. ஏனைய தெரொபோடா தொன்மாக்கள் டைரனசோரசை விட பெரியவையாக காணப்பட்டாலும் டைரனசோரிட்டுக்களில் பெரிய இனமாக டைரனசோரசு காணப்பட்டது. 13 [[மீட்டர்]] (43 [[அடி]]) நீளமும் <ref name="brochu2003">{{cite book |last=Brochu |first=Christopher A. |coauthors=Richard A. Ketcham |title=Osteology of Tyrannosaurus Rex: Insights from a Nearly Complete Skeleton and High-resolution Computed Tomographic Analysis of the Skull |year=2003 |publisher=[[Society of Vertebrate Paleontology]] |location=Northbrook, Illinois |oclc=51651461}}</ref> 4 மீ (13 அடி) உயரமும் <ref name=SueFMNH>{{cite web |url=http://www.fieldmuseum.org/sue/about_vital.asp |title=Sue's vital statistics |author= |work=Sue at the Field Museum |publisher=[[Field Museum of Natural History]] |accessdate=2007-09-15}}</ref> அண்ணளவாக 6.8 [[மெட்ரிக் [[தொன்|டன்]] எடையையும் கொண்ட<ref name="ericksonetal2004">{{cite_journal |last=Erickson, Gregory M. |coauthors=Makovicky, Peter J.; [[Phil Currie|Currie, Philip J.]]; Norell, Mark A.; Yerby, Scott A.; & Brochu, Christopher A. |year=2004 |title=Gigantism and comparative life-history parameters of tyrannosaurid dinosaurs |journal=Nature |volume=430 |issue=7001 |pages=772–775 |doi=10.1038/nature02699}}</ref> டைரனசோரசு அதந் சூழலில் மிகப்பெரிய வேட்டையாடும் விலங்காக காணப்பட்டது. [[எட்ரசோர்]], [[செரடொப்சியா]] போன்றவை அதன் இரை விலங்குகளாக காணப்பட்டிருக்கலாம். சில ஆய்வாளர்கள் டைரனசோரசு இறந்த விலங்குகளின் உடலங்களை தேடி உண்டதாக கருதுகின்றனர்.
 
முப்பதுக்குமதிகமான டைரனசோரசு புதைப்படிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இவற்றுள் சில முழுமையான மண்டையோட்டைக் கொண்டுள்ளன. ஆகக் குறைந்தது ஒரு மாதிரியிலாவது இழையங்களும் புரதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதைப்படிவ எச்சங்கள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளமை அதிகளவிலான ஆய்வுகளுக்கு வழிசெய்துள்ளது. இருப்பினும், இதன் உணவுப் பழக்கம், பயனித்த வேகம் போன்றவைத் தொடர்பில் வாதபிரதிவாதம் தொடர்கிறது. [[ஆசியா]]வில் கண்டெடுக்கப்பட்ட [[டர்போசோரசு|டர்போசோரசை]] டைரனசோசின் இரண்டாம் இனமாக ஒரு சாராரும் ஏனையவர்கள் டர்போசோரசை தனிப் பேரினமாகவும் கருதுவதால் டைரனசோரசின் வகைப்பாடும் சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/டைரனொசோரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது