அனகிலேத்துஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
 
சி திருத்தம்
வரிசை 16:
'''அனகிலேத்துஸ்''' (''Anacletus'') அல்லது '''கிலேத்துஸ்''' (''Cletus'') என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாம் திருத்தந்தையாவார். அவருக்கு முன் திருத்தந்தையராக இருந்தவர்கள் முதலில் [[பேதுரு (திருத்தந்தை)|பேதுரு]], அதன்பின் [[லைனஸ் (திருத்தந்தை)|லைனஸ்]] ஆவர்.
 
அனகிலேத்துஸ், கிலேத்துஸ் என்னும் இரு பெயர்கள் குறித்துநிற்பது ஒரே திருத்தந்தையையா அல்லது இருவரையா என்பது குறித்து ஐயம் நிலவி வந்துள்ளது. சில பண்டைய ஏடுகள் இரு பெயர்களும் இரு வேறு திருத்தந்தையரைக் குறிப்பதாகக் கூறுகின்றன. ஆனால் பெரும்பான்மையான ஏடுகள் தரும் சான்றின்படி, அனகிலேத்துஸ் என்னும் பெயரின் குறுகிய வடிவமே கிலேத்துஸ். எனவே அவ்விரு பெயர்களும் குறித்துநிற்பது ஒரே திருத்தந்தையைத் தான். அவர் புனித பேதுரு, லைனஸ் ஆகியோரின் வழியில் மூன்றாம் திருத்தந்தையாகப் பணியாற்றினார். [[முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|முதலாம் கிளமெண்ட்]] என்னும் திருத்தந்தை விட்டுச்சென்ற குறிப்பின்படி, லைனஸ் என்பவரே பேதுருவின் பின் திருத்தந்தை ஆனார்.
 
கிலேத்துஸ் என்னும் கிரேக்கப் பெயருக்கு "அழைக்கப்பட்டவர்" என்று பொருள். அனகிலேத்துஸ் என்றால் "மீண்டும் அழைக்கப்பட்டவர்" எனப் பொருள்படும்.
"https://ta.wikipedia.org/wiki/அனகிலேத்துஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது