நல்லூர் (யாழ்ப்பாணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sangkilithoppu.jpg|thumb|200px|சங்கிலி மன்னனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பிலுள்ள வளைவின் ஒரு தோற்றம்]]
யாழ்ப்பாணத்து '''நல்லூர்''' தற்போது [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] மாநகரசபை எல்லைக்குள் அடங்கியுள்ள ஒரு பகுதியாகும். யாழ்நகர மத்திய பகுதியிலிருந்து, சுமார் மூன்றரைக் கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசை]]ப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக நல்லூரே இருந்து வந்தது. [[ஆரியச் சக்கரவர்த்திகள்]] என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த [[கோட்டே]] அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்தி]]யான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]]யே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து.
 
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_(யாழ்ப்பாணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது