தேவிகாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 22:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,712 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - Tiruvannamalai District;Arani Taluk;Devikapuram Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 4,353 ஆண்கள், 4,359 பெண்கள் ஆவார்கள். தேவிகாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74.08% ஆகும். கொட்டாரம் மக்கள் தொகையில் 13.44% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
 
==பெயர்க்காரணம்==
வரி 31 ⟶ 30:
தனிப்பெரும் ஆலயத்துள் தேவி எழுந்தருளி இருந்து அருள்பாலித்து வருவதால் தேவி காத்தருளும் புரம் என்ற பொருளில் தேவிகாபுரம் என்று வழங்குகிறது எனக் கொள்ளினும் அதுவும் பொருந்துவதே ஆகும்.
 
==கோயில்கள்==
==அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில்==
கற்றவர் போற்றும் காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி தனிப்பெரும் ஆலயத்துள் எழுந்தருளியிருப்பது போல இங்கும் அன்னை ஆதிசக்தி தனி ஆலயத்துள் எழுந்தருளியிருந்து ஆருளாட்சி புரிந்து வருகின்றாள். இவ்வன்னையின் திருநாம்ம் பெரியநாச்சியார் என்னும் பெரியநாயகி என்று கல்வெட்டுகளால் அறிகிறோம்.
[[Image:DVM_view_frm_Hill.jpg|thumb|150px|right|Devikapuram viewed from Hill]]
இதனை இப்போது வடமொழி சொல்லால் ப்ருகதாம்பாள் என்று வழங்குகின்றனர். தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் எழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது.
 
==அருள்மிகு*[[தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் திருக்கோயில்==கோயில்]]
===புடைப்புச் சிற்பங்கள்===
==அருள்மிகு*[[தேவிகாபுரம் பொன்மலைநாதர் திருக்கோயில்]] (மலைக்கோயில்)==
ஆயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் கண்டு களிக்கலாம். முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன.
 
===காணவேண்டிய அழகிய மண்டபம்===
இவ்வாலயத்துள் 3 பிரகாரங்கள் (சுற்றுகள்) உள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது முதலாவதாக ஆலயத்தின் வலப்புறம் ஓர் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. அதன் கரையில் நான்கு கால்களைக் கொண்ட குதிரைகள் இழுத்துச்செல்வது போன்ற கல்யாண மண்டபம் மிக அற்புதமான சிற்ப எழிலுடன் அமைந்துள்ளது. இதில் மனுநீதி சோழன் வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் பொற்புடன் விளங்குகின்றன. இது காணவேண்டிய அழகிய மண்டபம் ஆகும்.
 
இவை இரண்டிற்கும் இடையில் பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இதை அடுத்து திருநந்தி தேவர் அன்னையை நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். இவரை வணங்கிய பின் கோயிலின் வலப்புறம் சென்று விநாயகப்பெருமானை வணங்கி வலமாக வருவோமானால் இடப்புறம் ஆறுமுகப்பெருமானைக் கண்டு வணங்கலாம். இம்மூன்றாம் பிரகாரத்தின் இருபுறங்களிலும் பண்டை நாளில் நறுமணங்கமழும் சோலைகள் இருந்தனவாக எண்ணுவதற்கு இடமளிக்கிறது.
 
===ஐந்து நிலைக்கோபுரம்===
அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெல்டுகள் காணப்படுகின்றன.
 
இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்றால் தெற்கு நோக்கியவாறு அருள் பாலிக்கும் நடராசமூர்த்தியைக் கண்டு வணங்கலாம். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளையும் வணங்கலாம். அடுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியவர்களின் திருவுருவங்களையும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளையும் வணங்கி மகிழலாம்.
 
இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர் திருமால் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய தெய்வ உருவங்களைக் கண்டு வணங்கலாம். எதிர்காலத்தில் வேறுசில தெய்வத்திருவுருவங்களை அமைக்கும் வாய்ப்பும் உள்ளன.
 
===அருளே வடிவான அன்னை பெரியநாயகி===
இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்து கொண்டு இறுதியில் உள் மண்டபத்தை அடைகிறோம். இதன் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி பக்தர்களுக்குக் காட்சி தரும் அற்புதமான கோலத்தைக் கண்டு வணங்கி துதித்து மகிழலாம். நாள் முழுவதும் கண்டு மகிழத்தக்க அருட்பேரழகினை உடையவள் அன்னை பெரியநாயகி. அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளையும் கொண்டு நின்ற கோலத்தில் அழகுடன் காட்சியளிக்கின்றாள்.
 
==அருள்மிகு பொன்மலைநாதர் திருக்கோயில் (மலைக்கோயில்)==
 
===கனகாசலம் அல்லது கனக்கரி===
அம்பாள் ஆலயத்தின் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரம் 5 கி.மி. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனக்கரி என்னும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருப்பெயர் கனககிரி ஈஸ்வரர் (அல்லது) பொன்மலைநாதர் என்பதாகும். கல்வெட்டுகள் இவரைத் திருமலை உடையார் அல்லது திருமலை உடைய நாயனார் என அழைக்கின்றன.
 
இக்கோயில் தோன்றிய வரலாற்றினைப் பற்றிய செவிவழிச்செய்திகள் இருவிதமாகக் கூறப்படுகின்றன. அவ்ற்றுள் ஒன்று (சிவமஞ்சரி 10 வது மலரில் வெளிவந்த கட்டுரை):
 
===பொன்போல் பிரகாசித்து மிதந்தது===
ஒரு சமயம் உலகம் ஒடுங்கிய ஊழி இரவில் உலகம் வெள்ளத்தால் அமிழ இம்மலைமட்டும் பொன்போல் பிரகாசித்து மிதந்தது.
 
எனவே இம்மலை பொன்மலைநாதர் என்றும் வழங்குவதாயிற்று. இதுவே வடமொழியில் கனகாசலம் , கனககிரி என்றும் இறைவனின் திருப்பெயர் கனக கிரிஸ்வரர் என்று வழங்குவதாயிற்று.
 
இம்மலையின் மீது பார்வதி தேவியார் சிவலிங்கம் அமைத்து நான்கு கால பூசை செய்தாள். அவள் பூசை செய்யும் சிறப்பையும் நேர்த்தியையும் காணச் சிவபெருமான் அருகில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவளுடைய அன்பையும் பத்தியையும் கண்டு அவளுக்குத் தரிசனம் தந்து அவளைத் தன் இடப்பாகத்தில் சேர்த்துக்கொண்டார். அந்த நாளே மகாசிவராத்திரி ஆகும்.
 
===அம்பிகை பூசை செய்வதாக ஐதீகம்===
இத்தலத்தில் இன்றும் சிவராத்திரி காலங்களில் அம்பிகை பூசை செய்வதாக ஐதீகம். எனவே சிவராத்திரி இரவில் நான்கு காலங்களிலும் இங்கு வழிபடுவது நாமும் அம்பிகையோடு சேர்ந்து வழிபடுவதாகவே கருதப்படும். இங்குள்ள பிரதிக்ஷ்டாலிங்கம் தேவியால் அமைக்கப்பட்டதென்றும் அருகில் உள்ள சுயம்பு லிங்கம் இறைவன் தான் தோன்றியதாக (சுயம்புவாக) எழுந்தருளிய நிலை என்றும் கூறுவர்.
 
மற்றொரு செவிவழிச்செய்தி. ஒரு சமயம் இம்மலைப்பகுதி அடர்நத காடாக இருந்த போது வேடன் ஒருவன். கிழங்கு அகழந்து எடுப்பதற்காக மலையுச்சியில் இரும்புக் கருவியைக் கொண்டு தோண்டிய போது குபீர் என குருதி கொப்பளித்துக்கொட்டியது. அதைக் கண்ட வேடன் உடனே ஊர் மக்களிடம் வந்து செய்தியைக் கூறினான். மக்கள் சிலர் மலையின் மீது சென்று மேலும் அகழ்ந்த போது ஓர் அழகிய சிவலிங்கத் திருமேனி காணப்பட்டது. அன்று முதல் மக்கள் அச்சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்து வந்தனர்.
 
===இரண்டு சிவலிங்க மூர்த்திகள்===
இவ்வாறு பூசை நடக்கும் நாளில் அவ்வழியாக வந்த அரசன் ஒருவன் இச்செய்தியைக் கேள்விப்பட்டு தான் கோவில் கட்டுவதாகக் கூறினான். பின்னர் அவ்வாறே கட்டி முடித்தான். அரசன் கட்டிமுடிக்கும் காலத்தில் சுவாமி மறைந்தருளினார். சுவாமி மறையவே அவ்வரசன் மிகவும் மனம் வருந்தி காசி விசுவநாதரை அமைத்துக் கும்பாபிசேகம் செய்த நாளன்று சுயம்பு மூர்த்தியும் தோன்றியருளினார். எனவே இன்னும் இரண்டு சிவலிங்க மூர்த்திகள் அமைந்திருப்பது நமக்குத் தெரிந்த அளவில் இத்திருத்தலத்தில் மட்டுமேயாகும்.
 
===கோயிலின் அமைப்பு===
இந்த மலைக்கோயில் கிழக்கு மேற்காக 185 அடி நீளமும் வடக்கு தெற்காக 75 அடி அகலமும் கொண்ட மதில்களுடன் விளங்குகிறது. இதன் முகப்பில் 36 கால்களை உடைய மண்டபத்துடன் கூடிய மூன்று நிலைகளைக் கொண்ட இராசகோபுரம் காட்சியளிக்கிறது. இம்மண்டபத்தின் முன் திருநந்திதேவர் கொடிமரம், பலிபீடம் முதலியன உள்ளன. இவற்றை வணங்கி உள்ளே சென்றால் பிரகாரத்தில் தென்முகக்கடவுள் விநாயகர், ஆறுமுகர், விசாலாட்சி அம்மாள், சண்டீஸ்வரர் முதலிய தெய்வத்திருவுருவங்களை (மூர்த்திகளை) வணங்கலாம்.
 
===அருணகிரிநாதர் எழுந்தருளி பாடலை அருளிச்செய்துள்ளார்===
இவ்வாலயத்திற்கு அருணகிரிநாதர் எழுந்தருளி ஆறுமுகப்பெருமான்மீது அரிசையர்கள் எனத்தொடங்கும் பாடலை அருளிச்செய்துள்ளார்.
 
===காசி விசுவநாதர், பொன்மலை நாதர்===
இக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் இரண்டு சிவலிங்க மூர்த்திகளைக் காணலாம். அம்மூர்த்திகளில் ஒருவர் அரசனால் பிரதிட்டை செய்யப்பட்டவர். அம்மூர்த்தியின் திருப்பெயர் காசி விசுவநாதர் என்பதாகும். மற்றொரு மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர். இவரின் திருப்பெயர் கனக கிரிஸ்வரர் (அல்லது) பொன்மலை நாதர் என்பதாகும். இவ்விருமூர்த்திகளும் தன்னை மெய்யன்புடன் துதிக்கும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அளிக்கின்றனர் என்பது திண்ணம்.
 
===பார்வதி தேவி தவம் செய்த இடம்===
இம்மலையிலிருந்து இறங்கும் போது இடப்புறம் பார்வதி தேவி தவம் செய்ததாகக் கருதப்படும் இடம் ஒன்று உள்ளது. அங்குத் தேவியின் திருப்பாதங்கள் காட்சியளிக்கின்றன. வலப்புறத்தில் வீரபத்திர ஆலயம் விளங்குகிறது.
 
 
வரி 93 ⟶ 40:
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
 
[[பகுப்பு: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
 
[[en: Devikapuram]]
"https://ta.wikipedia.org/wiki/தேவிகாபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது