மார்க்கண்டு சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
 
==சாதனை==
யோகசுவாமிகள் உணர்த்திய பிரதான சாதனை ”சும்மா இரு” என்பதுவே இவர உண்மையயை உணருவதற்கான சாதனையாக இருந்தது. சும்மா இரு என்பது பேச்சு வழக்கு மொழியில் வேலை ஏதும் இன்றி ஓய்வாயிரு என்னும் பொருள்படும். ஆனால் ஞானசாதனையில் சும்மா இரு என்பது உடலால் வேலைசெய்யாதிருத்தலையன்றி மனத்தினால் சும்மா இருத்தலே. அதாவது மனத்தினை அங்குமிங்குமலையவிடாமல் அசைவின்றிப் பேணுவதே. மார்க்கண்டு சுவாமிக்கு யோகசுவாமிகள் கூறிய வாசம் ”வடதிசை காட்டும் கருவி” (Be like a compass) போல் இரு என்பதாகும். அதே போல் அவரும் எப்பொழுதுமே பரப்பிரமத்தை நோக்கிய வண்ணமே சாதனை செய்திருந்தார். இவரை ஆலயங்கள் தோறும் சென்று வணங்குதற்கும் யோகசுவாமிகள் அனுமதிக்கவில்லை. அருகிலிருக்கும் நல்லூருக்கும் செல்ல அனுமதிக்கவல்லை. மார்க்கண்டு சுவாமிகளின் உடம்பைக் காட்டி ”இது தான் நல்லூர், இது தான் தேர்” என அருளினார். குண்டலினி பயிற்சிக்கும் இவரை அனுமதிக்கவில்லை. ”குண்டலினியின் எழுச்சியைப் பற்றியும் சிரத்தை கொள்ளத் தேவையில்லை” எனவும் அருளினார். இவ்வாறு எவ்வெவ் துறைகளில் மனம் இலயக்குமே அவ்வக்கருமங்களில் மார்க்கண்டு சுவாமிகளைச் செல்ல விடாமல் சும்மா இருப்பதற்கே அவரைப் பழக்கினார். அதுவே அவரது ஞானசாதனையாகவும் ஆயது.
 
==சமாதி==
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கண்டு_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது