நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
யாழ்ப்பாணக் குடாநாட்டில், [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து பருத்தித்துறை செல்லும் செல்லும் பாதையில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது '''நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்'''. யாழ்ப்பாண அரசு நிறுவப்பட்ட காலத்தில், அதன் முதல் அரசனான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] என்பவனால் தலைநகரமான [[நல்லூர் (யாழ்ப்பாணம்)||நல்லூரின்]] மேற்குத் திசையில் இக் கோயில் அமைக்கப்பட்டதாக யாழ்ப்பாண வரலாற்று நூலான [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறுகின்றது. குவைறோஸ் என்னும் போத்துக்கீசப் பாதிரியார் எழுதிய நூலில், யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் கைப்பற்றியபோது நடைபெற்ற போர் இரண்டு கோயில்களுக்கு இடையே நடைபெற்றதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று வீரமாகாளி அம்மன் கோயிலே எனக் கருதப்படுகின்றது.
 
கி.பி [[1620]] ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசரின்]] நேரடி ஆட்சிக்குள் சென்ற பின்னர், ஏனைய [[இந்துக் கோயில்]]களுடன் சேர்த்து இதுவும் இடித்து அழிக்கப்பட்டது. கி.பி 1700 களின் இறுதிப் பகுதியில் [[யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி|ஒல்லாந்தர்]] ஆட்சியின் போதும், அதன் பின்னர் [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர்]] ஆட்சியின் போதும், முன்னர் இடிக்கப்பட்ட கோயில்கள் மீளமைக்கப்பட்டபோது இக் கோயிலும் அது முன்னர் இருந்த இடத்திலேயே மீளமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_வீரமாகாளி_அம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது