லண்டன் வன்முறைகள் 2011: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
==கலவரக்காரர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன==
கலவரங்கள், சூறையாடல்கள் மற்றும் சொத்து சேதங்களில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கப்படும் ஆட்கள் சிலரின் படங்களை நாட்டின் நாளேடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன. இந்தப் படங்களைப் பார்த்து அதில் காணப்படுவோர் யாரையும் அடையாளம் தெரிந்தால் பொலிசில் தெரிவிக்குமாறு இந்தப் பத்திரிகைகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. இந்தப் படங்களை எல்லாம் பார்த்தால் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே தோன்றுகின்றனர். இந்தக் சூறையாடல்களில் பத்து வயதுப் பிள்ளைகள் கூட ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு லண்டனிலும் சரி, வேறு பல இடங்களிலும் சரி, இந்த அட்டூழியங்களில் விடலை வயதுப் பெண்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.
==அவசரகால அமைச்சரவைக் கூட்டம்==
பிரதமர் டேவிட் கேமரன் [[ஆகத்து 10]]ம் திகதி அவசரகால அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார். பின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் கலவரக்காரர்களை அடக்க ரப்பர் குண்டுகள், தண்ணீர் பீரங்கித் தாக்குதல் போன்றவற்றுக்கு அனுமதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,""கலவரக்காரர்களைத் திருப்பித் தாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. திருப்பித் தாக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டு விட்டது. அவர்களை அடக்க உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தவர்கள், அங்குள்ள சி.சி.டி.வி, கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவர். சட்டத்தின் கடுமையான தண்டனை அவர்களுக்குக் காத்திருக்கிறது.'' என்றார்.
 
==ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது==
 
"https://ta.wikipedia.org/wiki/லண்டன்_வன்முறைகள்_2011" இலிருந்து மீள்விக்கப்பட்டது