எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: vi:Hạm đội Tây Ban Nha
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
==கடல் போர்==
16 ஜூலை [[1588]] இல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. மெதினா சிதோனியா பிரபுவின் தலைமையில் ஸ்பானிஷ் கடற்படை இங்கிலாந்து நோக்கி முன்னேற ஆரம்பித்தது. அவரை எதிர்க்க இங்கிலாந்து கடற்படை 34 போர்க் கப்பல்கள் மற்றும் 163 ஆயுதமேந்திய வணிகக் கப்பல்களுடன் காத்திருந்த்துகாத்திருந்தது. கப்பல் எண்ணிக்கையில் இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்தாலும், ஸ்பானிஷ் கடற்படை அதிக பீரங்கிகளைக் கொண்டிருந்தது. ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் ஃபிரான்சிஸ் ட்ரேக் போன்ற திறமை வாய்ந்த கடல் தளபதிகள் இங்கிலாந்து கப்பல் படையை லாவகத்துடன் கையாண்டனர். 27 ஜூலை அன்று ஸ்பானிஷ் படை பிறை வடிவில் ப்ரான்சின் கலாய் (calais) கடற்கரையை அடைந்தது. நள்ளிரவில் டிரேக்கின் தீக்கப்பல்கள் ஸ்பானிஷ் கப்பல்களைத் தாக்கின. எண்ணையும், [[வெடிமருந்து|வெடிமருந்தும்]] நிரப்பி சிறு கப்பல்களை ஸ்பானிஷ் கப்பல்களின் மீது ட்ரேக் மோத விட்டார். இதனால் பல ஸ்பானிஷ் கப்பல்கள் தீப்பிடித்து மூழ்கின; அப்படை கட்டுப்பாட்டை இழந்து சிதறியது. பிறை விடிவ வியூகம் சிதறி நாற்புறமும் பிரிந்த ஸ்பானிஷ் படை, அருகிலிருந்த கிரேவ்லைன்ஸ் துறைமுகத்தில் ஒன்று சேர முயற்சித்தது. ஆனால் இதற்குள், அப்படையின் பலவீனங்களை அறிந்து கொண்ட ஆங்கில மாலுமிகள் இடை விடாது தாக்கினர். ஒற்றுமை அறவே இழந்த ஸ்பானிஷ் படை பின் வாங்கி வட [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடல்]] பக்கம் சென்று விட்டது.
[[Image:Routes of the Spanish Armada.gif|thumb|எசுப்பானிய கப்பல்கள் சென்ற வழிகள்]]
பிரிட்டிஷ் தீவுகளின் வட முனையை சுற்றி, [[அயர்லாந்து]] கடற்கரையோரமாக வந்து இங்கிலாந்தை மீண்டும் தாக்க மெதினா சிதோனியா திட்டமிட்டார். ஆனால் இரண்டு மாதம் நீடித்த அந்த பயணத்தில், அப்படை பெரும் புயல்களால் தாக்கப்பட்டு நிலை குலைந்தது. பல கப்பல்கள் மூழ்கின, 5000 க்கும் மேற்பட்ட மாலுமிகள், நோயாலும் பசியாலும் இறந்தனர். மெதினா சிதோனா மீண்டும் இங்கிலாந்தைத் தாக்கும் எண்ணத்தை கைவிட்டு ஸ்பெயின் திரும்பினார். அதோடு பிலிப்பின் படையெடுப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டன. இக்கடல் போரில் புயல்கள் ஏற்படுத்திய சேதத்தால் இங்கிலாந்து மீண்டும் தாக்குதலில் இருந்து தப்பியது. இதனை நினைவு கூறும் வகையில் எலிசபெத்து அரசி “கடவுள் ஊதினார், அவர்கள் (கத்தொலிக்கர்கள்கத்தோலிக்கர்கள்) சிதறினர்” என்ற [[இலத்தீன்]] வாசகம் பொறித்த பதக்கங்களை வெளியிட்டார். இங்கிலாந்தின் இந்த வெற்றி, [[ஐரோப்பா|ஐரோப்பாவின்]] ப்ராடஸ்டன்ட் கிருத்துவர்களுக்கு பெரும் ஊக்கமளிப்பதாக இருந்தது.
 
==மேற்கோள்கள்==