சாந்தோக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
"'''சாந்தோக்ய உபநிடதம்''' என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 31:
 
ஆதி சங்கரருடைய பாஷ்யம் சாந்தோக்ய உபநிடதத்தின் எல்லா உரைகளிலும் முந்தியது.
 
==பிரகதாரண்யமும் சாந்தோக்யமும்==
 
பிரகதாரண்யக உபநிடதமும் சாந்தோக்ய உபநிடதமும் இரு மிகப்பெரிய உபநிடதங்கள்.இரண்டிற்கும் ஆதி சங்கரரும் இன்னும் மற்ற ஆசாரியர்களும் விரிவாக உரை எழுதியிருக்கின்றனர். இவையிரண்டில் இல்லாத வேதாந்த தத்துவங்கள் வேறு எங்குமே இல்லை என்று சொல்ல முடியும். ஆனால் இரண்டையும் ஆழமாகப் பார்க்கும்போது ஒரு முக்கியமான வேறுபாட்டைக் காணலாம். சாந்தோக்யம் இப்பிரபஞ்சத்தில் நம் புலன்களுக்குப் புலனாவதில் தொடங்கி நம்மை பிரும்மத்திற்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கிறது. பிருகதாரண்யகம் நம் புலன்கள் அறியக்கூடியவைகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட பிரம்மத்தை நம்மறிவிற்கு உட்படுத்தமாட்டாமையை விளக்குகிறது. இதனால் சாந்தோக்யத்தை 'ஸப்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் பிரகதாரண்யகத்தை 'நிஷ்பிரபஞ்ச உபநிடதம்' என்றும் சொல்வதுண்டு <ref> </ref>.
 
==முதல் அத்தியாயம்==
 
ஓங்காரத்தின் மகிமையை அறிந்து, சிரத்தையுடனும் யோகமுறைப்படியும் செய்யப்படும் உபாசனையே வீரியமுடையதாகும். சூரியனிடம் போற்றப்படும் தெய்வம் எதுவோ அதுவே கண்ணில் ஒளியாயிருப்பது. இதுதான் அக்ஷி வித்தை. (அக்ஷி = கண்). இவ்வுலகிற்குப்புகலிடம் 'ஆகாசம்' (=வெளி). 'ஆகாசம்' என்ற வடமொழிச்சொல்லிற்கு <ref> ''ஆ'' = எங்கும்; ''காசம்'' = பிரகாசிப்பது </ref> 'எங்கும் விளங்கும் பொருள்' என்று தமிழில் சொல்லலாம். இதனால் 'ஆகாசம்' என்ற தத்துவத்தை 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' விளங்கும் பரம்பொருள் என்றே அறிந்து கொள்ளலாம். இவ்விதம் அறிந்து கொள்வதைத்தான் 'ஆகாச வித்தை' என்பர்.
 
இதற்குப்பிறகு அத்தியாயத்தின் முடிவில் உஷஸ்தி என்பவருடைய கதை வருகிறது. இவர் கிராமம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது, வேறு வழியில்லாமல் கொள்ளைத் தின்றுகொண்டிருந்த யானைக்காரன் ஒருவனிடம் பிச்சை கேட்டார். அவன் தான் தின்றுகொண்டிருந்த கொள்ளையே இவருக்குக் கொடுத்தான். கூடவே தண்ணீரும் கொடுத்தான். கொள்ளை ஏற்றுக்கொண்ட உஷஸ்தி தண்ணீரை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஏனென்றால் அது ஒருவர் சாப்பிட்டமீதம் என்றார். அப்படியென்றால் கொள்ளை மாத்திரம் எப்படி ஏற்றுக்கொண்டீர் என்று கேட்டதற்கு 'அதை உண்ணாவிடில் என் உயிர் நிலைத்திருக்காது; குடி நீரோவெனின் காமமாகும்' என்றார். உயிருக்கு ஆபத்து இருக்கும்போது தன் ஆசாரத்தை மீறுவது தவறாகாது என்பது இதனால் தெரியப்படுத்தப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
==மேற்கோள்கள்==
<References/>
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது