சாந்தோக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
==முதல் வாக்கியமே ஒரு மேல்நோக்கு==
 
எல்லா வேதாந்த நூல்களிலும் தொடக்கத்திலுள்ள வாக்கியங்கள் அந்நூலின் முக்கிய உட்கருத்துக்களை அதனுள் அடக்கியிருக்கவேண்டும் என்ற விதிப்படி, இந்நூலும் தொடக்கவாக்கியத்திலேயே அதனுடைய குறிக்கோளைக் காட்டிவிடுகிறது. [[ஈசாவாஸ்ய உபநிடதம் |ஈசாவாஸ்ய உபநிடதத்தின்]] முதல் வாக்கியம், [[கேன உப்நிடதம் |கேன உபநிடதத்தின்]] முதல் சில வாக்கியங்கள், [[பிருகதாரண்யக உபநிடதம் | பிருகதாரண்யக உபநிடதத்தின்]] அசுவம் (குதிரை) முதலிய எல்லாமே அந்தந்த உபநிடதத்தின் உட்கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன.சாந்தோக்ய உபநிடதத்தில் பல உபாசனைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் முக்கியமானது ஓங்கார உபாசனை. உபாசனை என்றால் தியானத்தின் மூலம் தியானப்பொருளின் தத்துவத்திலேயே நிலைத்திருப்பது.'[[ஸர்வங்கல்விதம்ஸர்வம் கலு இதம் பிரம்ம]]', '[[தத்துவமசி என்ற மகாவாக்கியம் | தத் த்வம் அஸி]]' '[[ஆத்மைவேதம் ஸர்வம்]]' முதலிய மஹாவாக்யங்களே இவ்வுபநிடதத்தின் சாராம்சம். மஹாவாக்கியங்களோ ஓங்காரத்தில் அடங்கியவை. படிப்படியாக ஓங்காரப் பொருளை விளங்க வைப்பதே இவ்வுபநிடதத்தின் முக்கிய நோக்கம்.'உத்கீதம்' எனப் பெயர் பெற்ற 'ஓம்' என்ற ஒற்றையெழுத்துச் சொல்லை உபாசிக்கவேண்டும் என்று தொடங்குகிறது உபநிடதம். ஓம் என்று தொடங்கியே அத்தனை வேதங்களும் கானம் செய்யப்படுகின்றன. பிரம்மத்தின் சின்னம் ஓம். சின்னம் மட்டுமல்ல, சின்னமே பிரம்மம். அதனால் பிரம்மத்தை தியானம் பண்ணுவதற்கு இதுவே வழி. இதுவே முடிவு.
 
==உரைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது