உயிரெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==ஒலிப்பு==
{{IPA vowel chart}}
 
உயிரொலிகளை வேறுபடுத்திக் கூறுவதற்கு மூன்று அடிப்படையான ஒலிப்பு இயல்புகள் பயன்படுகின்றன. இவை,
 
வரிசை 12:
 
===உயரம்===
வாய்க்குள், நிலைக்குத்துத் திசையில் நாக்கின் வெவ்வேறு நிலைகளை உயிரொலியின் உயரம் என்று குறிப்பிடுகின்றனர். நாக்கு வாய்க்குள் அண்ணத்துக்கு அண்மையில் இருக்கும் நிலை மேல் நிலை ஆகும். [இ], [உ] ஆகிய உயிர்களை ஒலிக்கும்போது இவ்வாறு நிகழ்வதைக் காணலாம். அண்ணத்திலிருந்து கூடிய தூரத்தில் கீழே நாக்கு இருப்பது கீழ் நிலை. [அ] என்னும் உயிரை ஒலிக்கும்போது இவ்வாறு ஏற்படும். இவற்றுக்கு இடையில் இருப்பது இடை நிலை. நாக்கு மேல்நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை [[மேலுயிர்]] என்றும், கீழ் நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை [[கீழுயிர்]]கள் என்றும் அழைக்கின்றனர். இடைநிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகள் [[இடையுயிர்]]கள் எனப்படுகின்றன. மேலுயிர்களை ஒலிக்கும்போது தாடை மேலெழும்பி ஏறத்தாழ மூடிய நிலையை அடைகிறது. அவ்வாறே, கீழுயிர்களை ஒலிக்கும்போது தாடை கீழிறங்கித் திறந்த நிலையை அடைகிறது. இதனால், மேலுயிரை ''மூடுயிர்'' என்றும் கீழுயிரைத் ''திறப்புயிர்'' என்றும் அழைப்பதுண்டு. இந்தச் சொற் பயன்பாடுகளே [[அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில்அரிச்சுவடி]]யில் பயன்படுகிறது. உயிரொலி "உயரம்" என்பது "ஒலிப்புறுப்புப் பண்பு" என்பதைவிட அது ஒரு "ஒலியியல் பண்பு" என்பதே பொருத்தமானது. இதனால் தற்காலத்தில், உயிரொலி உயரம் என்பதை நாக்கின் நிலையைக் கொண்டோ அல்லது தாடையின் திறப்பு நிலையைக் கொண்டோ தீர்மானிப்பது இல்லை. முதல் [[ஒலியலைச்செறிவு|ஒலியலைச்செறிவின்]] (F1) சார்பு அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டே உயிரொலி "உயரம்" வரையறுக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உயிரெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது