பேச்சு:இலங்கைச் சோனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
==சான்று தேவை==
தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்ற முஸ்லீம்கள் நிறையப் பேர் உள்ளனர். இன்றும் கொழும்பில் வணிகத்தில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனக்குத் தெரிய காயல்பட்டிணத்தைச் சேர்ந்த பலர் கொழும்பில் உள்ளனர். எப்படி எல்லோரையுமே அரேபியாவில் இருந்து வந்ததாக குறிப்பிட முடியும்? தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்ற முஸ்லீம்கள் பலர் இன்றும் தமிழ்நாட்டுடன் உறவு வைத்துள்ளனர். உறவுமுறையுடன் தமிழ்நாடு வந்து செல்வோரும் உள்ளனர். இப்படி இலங்கை முஸ்லீம்களிடன் உறவினாராக கொண்ட அரேபியர்கள் யாராவது உள்ளனரா? உறவுமுறைகள் பேணப்படுகின்றனவா? இந்த உறவுமுறை குறித்து அரேபியர்களாகவே குறிப்பிட்ட சான்றுகள் ஏதும் உள்ளனவா? -மொஹமட்
 
இந்த முஸ்லிம் என்ற வார்த்தை எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்களை கடந்த பெயர். அதாவது யார் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களைக் குறிக்கும் சொல். அவர் எங்கு இருக்கிறார், என்ன மொழி பேசுகிறார், என்ன நிறத்தையுடையவர் என்ற கேள்விகளை எல்லாம் தாண்டிய ஒரு அடையாளம்.
ஆனால் இந்த சோனகர் என்ற வரையறைக்குள் வருபவர்கள் “இஸ்லாம்” என்ற சமயத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்களின் மற்றொரு பெயர் சோனகர் என்ற அறியாமையில் பலர் உள்ளனர். இதுதான் அது, ஆகவே அதுதான் இது என்ற ஒரு குழப்பத்துக்குள் உள்ளனர். தெளிவு படுத்தப்பட வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இலங்கைச்_சோனகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலங்கைச் சோனகர்" page.