உயிரெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
 
===இதழ்குவிவு இயல்பு===
இதழ்குவிவு இயல்பு என்பது ஒலிக்கும்போது இதழ் குவிந்த நிலையில் அமைகிறதா அல்லவா என்பதை விளக்குகிறது. பெரும்பாலான மொழிகளில் இதழ்குவிவு இயல்பு, இடையுயிர் முதல் மேல்-பின்னுயிர்கள் வரையான உயிரொலிகளை வலுப்படுத்துவதாக அமைகிறதேயன்றித் தனித்துவமான ஒரு அம்சமாக அது அமைவதில்லை. பொதுவாகப் பின்னுயிர்களில் உயரம் கூடுதலாக இருக்கும்போது இதழ் குவிவதும் கூடுதலாக இருக்கும். எனினும், [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]], [[செருமன் மொழி|செருமன்]], பெரும்பாலான [[உராலிய மொழிகள்]], [[துருக்கிய மொழிகள்]], [[வியட்நாமிய மொழி]], [[கொரிய மொழி]] போன்ற சில மொழிகள் இதழ்குவிவு இயல்பையும், பின்-முன் இயல்பையும் தனித்தனியாகவே கையாளுகின்றன.
 
 
இருந்தபோதிலும், செருமன், வியட்நாமியம் ஆகிய மொழிகளிலும் கூட, இதழ்குவிவு இயல்புக்கும், பின்னியல்புக்கும் இடையே ஓரளவு தொடர்பு இருப்பதைக் காணலாம். இவற்றில், [[முன் இதழ்குவி உயிர்]]கள், [[முன் இதழ்விரி உயிர்]]களிலும் குறைந்த முன்னியல்பு கொண்டவையாகவும், [[பின் இதழ்விரி உயிர்]]கள், [[பின் இதழ்குவி உயிர்]]களிலும் குறைந்த பின்னியல்பு கொண்டவையாகவும் இருக்கின்றன. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில், இதழ்விரி உயிர்கள், இதழ்குவி உயிர்களின் இடப்பக்கத்தில் வைக்கப்பட்டு இருப்பது இந்த நிலையைக் காட்டுவதாக உள்ளது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/உயிரெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது