வஜ்ர ஸூசிகா உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 55:
பிராம்மணத் தன்மை என்பது இரண்டற்ற சச்சிதானந்த ஆன்மாவை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அனுபவித்தறிவது. இவ்வான்மாவாகவே இருப்பது. அது ஜாதி, குணம், செயல் மூன்றும் அற்றது.
பிறப்பு, இருப்பது, வளர்வது, மலர்வது, மெலிவடைவது, இறப்பது -- ஆகிய ஆறு மாறுதல்களும் இல்லாதது.
மற்றும் ஆறு 'ஊர்மிகளும்' -- அ-து, மூப்பு, மரணம், வியாதி, உலக மயக்கம், பசி, தாகம் ஆகிய ஆறு 'அலைகள்' -- அற்றது. குற்றங்குறைகளற்றது. சத்யம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்ற வடிவுடையது. எல்லாக்கற்பனைகளுக்கும் ஆதாரமாயினும் ஒரு கற்பனையிலும் அட்ங்காதது. எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயக்குவது. ஆகாயத்தைப்போல உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்தவடிவாயிருப்பது. மனதிற்கெட்டாதது. அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியது. எவனொருவன் இப்பேர்ப்பட்ட ஆன்ம வடிவினனாகவே இருந்துகொண்டு, அதனாலேயே விருப்பு வெறுப்பு அற்றவனாகவும், சமம் தமம் முதலிய தன்னடக்கங்களுடன், அழுக்காறு, அவா, வெகுளி முதலியவை நீங்கியவனாகவும், டம்பம், அகந்தை முதலியவற்றால் தொடப்படாதவனாகவும்தீண்டப்படாதவனாகவும், வீடுபெறத் தகுந்தவனாகவும் இருப்பவன் எவனோ அவனே பிராம்மணன் என்பது சுருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்களின் முடிவான கருத்து. இதற்குப் புறம்பாக பிராம்மணத் தன்மை இல்லவே இல்லை.
 
==துணைநூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வஜ்ர_ஸூசிகா_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது