கிறீஸ் மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
==பகலில் தூங்கி இரவில் விழிக்கும் மக்கள்==
கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் அச்ச நிலை காரணமாக அம்பாறை, மட்டு. மாவட்டங்களில் பொது மக்கள் பகலில் தூங்கி இரவில் விழிக்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். தொழிலுக்குச் செல்வோர் இரு வேளையும் விழித்திருக்க வேண்டிய நிலையில் சிறுவர்கள் பலமான பீதியிலும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகி வருவதாகவும், பெண்கள் தமது ஆண் துணைகளை வலுக்கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் முடக்குகின்றனர் எனவும், நோன்பு காலமாகையால் பள்ளிக்கு தொழுகைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை எழுந்துள்ளதாகவும், 3 வருடங்கள் படித்த உயர் தர மாணவர்கள் திருப்தியாக பரீட்சை எழுத முடியாத நிலையில் உள்ளதாகவும் எங்கு பார்த்தாலும் மர்ம மனிதன் பற்றிய கதையே நடக்கிறது எனவும், மக்களின் மன நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தினமும் புதுப்புதுச் செய்திகள் உண்மையாகவோ, வதந்தியாகவோ குவிகின்றன. பலர் கேட்டுக் கேட்டு, அலுத்துப் போயுள்ளனர். <ref> [http://www.thinakaran.lk/2011/08/16/default.asp?fn=n1108166 பகலில் தூங்கி இரவில் விழிக்கும் மக்கள்], தினகரன், ஆகத்து 16, 2011</ref>
==போதனா வைத்தியசாலையில் மர்ம மனிதர்கள்==
[[மட்டக்களப்பு]] போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்குள் மர்ம மனிதர்கள் இருவர் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்றம் நிலவியது. [[ஆகத்து 19]] பிற்பகல் 12.30 மணியளவில் மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியின் சுற்று மதிலினால் மர்ம மனிதர்கள் பாய்ந்து ஓடியதை அங்கிருந்த தாதியர் மாணவியர் கண்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆண் தாதி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மர்ம மனிதர்களை தேடியதுடன் மட்டக்களப்பு பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது அச்சத்தினால் சில தாதி மாணவிகள் மயங்கி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தையடுத்து நேற்றைய பாடநெறிகள் இடை நிறுத்தப்பட்டன. எனினும் அங்கு மர்ம மனிதர்கள் எவரும் தென்படவில்லை. இதேவேளை மேற்படி சம்பவத்தை படமெடுக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் வீடியோ கமரா மற்றும் ஊடகவியலாளருக்கான அடையாள அட்டை என்பன அங்கிருந்த பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.<ref> [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33382 மட்டு. தாதியர் பயிற்சி கல்லூரிக்குள் மர்ம மனிதர்கள் ஊடுருவல்], வீரகேசரி, ஆகத்து 20, 2011</ref>
==புலிகளிருந்த காலத்தை விட மக்கள் அச்சத்தில்==
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நிலவிய அச்சமான சூழ்நிலையை விடவும் தற்போது கிறீஸ் பூதம் என்ற பிரச்சினையால் மக்கள் அதிகம் அச்சமடைந்துள்ளனர். எனவே, அரசாங்கம் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் [[ஆகத்து 19]] இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது. இந்த பிரச்சினையால் கிழக்கு மாகாணம் அதிர்ந்து போயுள்ளது. இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரமில்லாமல் தெற்கிலும் மலையகத்திலும் இந்த பிரச்சினையானது வியாபித்துள்ளது. தொடர்ச்சியாக பெண்கள் மீதான தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன. அதனால் மக்கள் செய்வதறியாது அரசாங்கத்துக்கெதிராகவும் பொலிஸாருக்கெதிராகவும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிலர் பலியாகியுமுள்ளனர். இது பெரும் கட்டுக்கதை இதில் உண்மைத் தன்மை இல்லை என கூறி விட்டு சாதாரணமாக இருந்து விட முடியாது இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் இந்த அசம்பாவிதம் நீடிக்காமல் அதனை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.<ref> [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33381 புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க], வீரகேசரி, ஆகத்து 20, 2011</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிறீஸ்_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது