மலையக தோட்டத் தொழிலாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''மலையகத் தொழிலாளர்கள்''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:33, 23 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

மலையகத் தொழிலாளர்கள் என்போர் இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில், தோட்டத் தொழிலாளர்களாக தொழில் புரிவோரை குறிக்கப் பயன்படும் ஒரு சொற்றொடராகும். இருப்பினும் இலங்கையின் மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு அல்லாத அனைத்து பிரதேசங்களிலும் தோட்டத்தொழிலாளர்களாக தொழில் புரிவோரையும் "மலையகத் தொழிலாளர்கள்" அல்லது "தோட்டத் தொழிலாளர்கள்" என்று அழைப்பதுண்டு.

இலங்கையில் மலையகத் தொழிலாளர்கள் என்போர், பிரித்தானியரின் ஆட்சியின் போது பெருந்தோட்டப் பயிர் செய்கைக்காக கூலி தொழிலார்களாக தென்னிந்தியாவில் அழைத்து வரப்பட்டவர்களான தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு, கன்னடா போன்றவர்களை குறிப்பர். இருப்பினும் தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பல்வேறு மாநிலத்தவரும் தற்போது இந்திய வம்சாவளித் தமிழர்களாகவே இனங்காணப்படுகின்றனர். அதேவேளை சில இடங்களில் மலையாளத்தவர் தமிழ் பேசினாலும், தங்களது மலையாள வழக்குகளை பேணுவோரும் காணப்படுகின்றது. அதேவேளை இலங்கை தோட்டத் தொழிலாளர்களாக சிங்களவர்களும் உள்ளனர்.

இவர்களைத் தவிர, இலங்கை தமிழர்களான வட கிழக்கு தமிழர்களும், முஸ்லீம்களும் தோட்டத் தொழிலாளர்களாக எங்கும் பணிப்புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை தோட்டங்களில் அதிகாரிகளாக பணிப்புரிந்தோர் உளர்.