"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
இலங்கையில் [[1977]]ம் ஆண்டு ஆட்சியின் பின்னர் தோட்டங்களை பிரித்து, அதன் காணிகளை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டங்கள் தோன்றத் தொடங்கியதன் பின்னர். தோட்டங்கள் பல மறைந்து, சிங்கள கிராமங்களாக மாற்றம் அடையத் தொடங்கின. அக்காலப்பகுதிகளில் சிங்கள தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணிகள் கிடைக்கப்பெற்றதால், அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எனும் நிலையில் இருந்து கிராம மக்களாக மாற்றம் பெற்றுவிட்டனர். இருப்பினும் இன்னும் சில இடங்களில், மிக சொற்பமான அளவில் தோட்டத் தொழிலாளர்களாக [[சிங்களவர்]]கள் இருப்பது காணக்கூடியதாக உள்ளது.
 
==தோட்டங்கள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளித்தல்==
தோட்டங்கள் "கொலனிமயமாக்கல்" எனும் பெயரில் பகிர்ந்தளிக்கும் திட்டம் [[1977]]ம் ஆண்டு தொடங்கியது. அப்போது ஆட்சிக்கு வந்த [[ஐக்கிய தேசியக் கட்சி]] தமது ஆதரவாளர்களுக்கு தோட்டங்களை பிரித்து காணிகள் வழங்கி கிரமமயமாக மாற்றினர். அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்களும் இதே முறைமையை தொடர்ந்ததால் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்த அனைத்து தோட்டங்களுமே சிங்களவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு சிங்களக் கிராமங்களாக மாறிவிட்டன. தற்போது மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே அதிகமான தோட்டங்கள் உள்ளன.
 
இவ்வாறு தோட்டங்களை பிரித்து காணிகள் வழங்கியப் பகுதிகளில் ஆட்சிக்கு வந்த கட்சிக்கு ஆதரவாக இருந்த, அதேவேளை வாக்குரிமை இருந்த ஒரு சில தமிழர்களுக்கு காணிகள் கிடைத்துள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருந்தும் வாக்குரிமை அற்றவர்களாக இருந்த தமிழர்களுக்கு காணிகள் வழங்கப்பட வில்லை. அதேவேளை அக்காலப்பகுதியில் அதிகமான மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் தோட்டங்கள் பிரித்து சிங்களவர்களின் காணிகளாகியதும், அங்கே தோட்டத் தொழிலைத் தவிர வேறு தொழில்கள் தெரியாத மலையகத் தமிழர்கள், சிங்களவர்களின் காணிகளில் கூலித் தொழிலாளர்களாக வேலைச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 
==மலையகத் தமிழர் எதிர்நோக்கியப் பிரச்சினைகள்==
 
==தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழர் எதிர்நோக்கிப் பிரச்சினைகள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/851857" இருந்து மீள்விக்கப்பட்டது