புறாத்து ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,520 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''இயூபிரட்டீசு ஆறு''' ({{IPA-en|juːˈfreɪtiːz||En-us-Euphrates.ogg}}, {{lang-ar|الفرات}}: ''al-Furāt'', {{lang-he|פרת}}: ''Prat'', {{lang-tr|Fırat}}, {{lang-ku|Firat}}), மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு [[ஆறு]] ஆகும். இப்பகுதியில் ஓடும் [[டைகிரிசு]] என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய [[மெசொப்பொத்தேமியா]]வை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, [[சிரியா]], [[ஈராக்]] ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, [[சாட்-அல்-அராப்]] (Shatt al-Arab) என்னும் இடத்தில்ஆற்றின் டைகிரிசு ஆற்றுடன் இணைந்து,ஊடாகப் [[பாரசீகக் குடா]]வில் கலக்கின்றது.
 
==சொற்பிறப்பு==
இந்த ஆற்றைப் பற்றிய மிகவும் பழைய குறிப்பு, தெற்கு ஈராக்கில் உள்ள [[சுருப்பக்]], [[நிப்பூர்]] ஆகிய இடங்களில் கிடைத்த [[ஆப்பெழுத்து]] ஆவணங்களில் காணப்படுகிறது. இந்த ஆவணங்கள் கிமு மூன்றாம் [[ஆயிரவாண்டு|ஆயிரவாண்டின்]] நடுப் பகுதியைச் சேர்ந்தவை. சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணங்களின்படி இந்த ஆற்றின் பெயர் ''புரானுனா''. அக்காடிய மொழியில் இயூபிரட்டீசை ''புரத்து'' என அழைத்தனர். பழைய [[பாரசீக மொழி]]யில் ''உஃபராத்து'' என அழைக்கப்பட்ட இந்த ஆற்றை, இடைக்காலப் பாரசீக மொழியில் ''ஃப்ரட்'' என்றும், துருக்கிய மொழியில் ''ஃபிரட்'' என்றும் அழைத்தனர். இதிலிருந்தே தற்கால ஆங்கிலப் பெயரான ''இயூஃபிரட்டீஸ்'' ''(Euphrates)'' பெறப்பட்டது. "நல்லது" என்னும் பொருள் கொண்ட பழைய பாரசீக மொழிப் பெயரான ''உஃபராத்து'' என்பதைப் பின்பற்றியே [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லான Εὐφράτης (இயூஃபிரட்டீஸ்) உருவானது.
 
==பாதை==
[[காரா ஆறு|காரா சூ]] அல்லது மேற்கு இயூபிரட்டீசும் (450 கிலோமீட்டர் (280 மைல்)), [[மூரத் ஆறு|மூரத் சூ]] அல்லது கிழக்கு இயூபிரட்டீசும் (650 கிலோமீட்டர் (400 மைல்)) சந்திக்கும் இடத்திலிருந்து இயூபிரட்டீசு தொடங்குகிறது. இவ்விடம், துருக்கியில் உள்ள கெபான் என்னும் நகரத்தில் இருந்து, ஆற்றின் போக்குக்கு எதிர்த் திசையில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் உள்ளது. டவூடி, ஃபிரெங்கென் ஆகியோரின் கணக்கீட்டின் படி, மூரத் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து, இயூபிரட்டீசு ஆறு, டைகிரிசு ஆற்றுடன் இணையும் இடம் வரையிலான மொத்த நீளம் 3000 கிலோமீட்டர்கள் (1,900 மைல்கள்). இதில் 1,230 கிலோமீட்டர்கள் (760 மைல்கள்) துருக்கியின் எல்லைக்குள் உள்ளது. எஞ்சியதில் 710 (440 மைல்கள்) கிலோமீட்டர்கள் சிரியாவிலும், 1,060 கிலோமீட்டர்கள் (660 மைல்கள்) ஈராக்கிலும் உள்ளது. இயூபிரட்டீசு, டைகிரிசு ஆறுகள் இணையும் இடத்தில் இருந்து பாரசீகக்குடா வரையிலான ''சாட்-அல்-அராப்'' ஆற்றுப் பகுதியின் நீளத்தை பலரும் வெவ்வேறு அளவினதாகக் கணித்துள்ளனர். இக் கணிப்பீடுகள் 145 - 195 கிலோமீட்டர்கள் (90 - 121 மைல்கள்) வரையில் அமைகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/851859" இருந்து மீள்விக்கப்பட்டது