"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,939 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==முஸ்லீம்களின் ஆதரவு==
தோட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டு, சிங்கள கிராமங்களாக மாறியதன் பின்னர், தமது சமூக அடையாளங்களையும் ஒருங்கிணைந்து பேண முடியாத சூழ்நிலையில், தமிழ் பாடசாலைகளும் இல்லாத நிலையில், சிங்களப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வந்த அதேவேளை, முஸ்லீம்கள் செரிந்து வாழும் ஊர்களில் முஸ்லீம் பாடசாலைகள் இருப்பதால், அவை தமிழ் வழி கல்வி கற்பிக்கும் பாடசாலைகள் என்பதால், அப்பாடசாலைகளிற்கு தமது குழந்தைகளை அனுப்பு தமிழ் வழி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர். இவ்வாறான நிலையில் முஸ்லீம் சமூகம் மலையகத் தமிழர்களுக்கு ஆதரவாக உதவிய இடங்கள் பலவற்றை அறியலாம். இந்த உறவின் காரணமாக ஓரளவான மலையகத் தமிழர்கள் இஸ்லாம் மார்க்கத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியதுடன், முஸ்லீம்களாக மாறினர். குறிப்பாக தென்னிலங்கை மற்றும் மேற்கு பிரதேசங்களில் இவ்வாறான நிகழ்வுகள் பல இடம்பெற்றிருப்பதனை காணலாம்.
 
==மலையகத் தமிழரின் வாழ்நிலை==
தென்னிந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அழைத்து வரப்பட்டவர்களான இவர்களுக்கு அக்காலம் முதல் இன்று வரை போதிய ஊதியம் இன்றியே வேலை வாங்கப்படுகிறது. ஒப்புநோக்கில் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்றவர்களாகவே இவர்கள் வாழ்கின்றனர். மிகவும் கடினமான தொழில் புரியும் இவர்களுக்கு தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஊதியம் என்றாலும் இல்லை. இலங்கையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்புவரை, இலங்கையின் பிரதான வருமானமே பெருந்தோட்டப் பயிர்செய்கையின் ஊடாகவே கிடைக்கப்பட்டது. எனினும் தற்போதும் இவர்கள் வாழும் பகுதிகள் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற சமூகமாகவே உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது ''லயான்'' என அழைக்கப்படும் குதிரைகளை அடைக்கும் நீண்ட கொட்டில்களிலே இன்றும் பெரும்பான்மையோனோரின் வசிப்பிடங்களாக உள்ளன. அத்துடன் அடிப்படை வசதிகள் எதுவும் இவருகளுக்கு இல்லை. நூலகம், உடற்பயிற்சி மையம், விளையாட்டு மைதானம் போன்ற எதுவும் அநேகமான இடங்களில் இல்லை. இன்னும் பல தோட்டத் தொழிலார்களுக்கு மலசலக்கூட வசதிகள் கூட இல்லை.
 
இவர்களது கடின உழைப்புக்கு வழங்கும் ஊதியம் இவர்களது உணவுக்கே போதாத நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைவில் உள்ளவர்களாக, தமது உரிமைகளை கேட்டும் பெறும் அல்லது தமது உரிமைகளே என்ன என்று தெரியாத நிலையில் அதிகமானோர் வாழ்கின்றனர். இவர்களுக்கான அமைச்சர்களும் பெரிதாக இவர்களது உரிமைகள் தொடர்பில் ஒரு வரையரைக்கு மேலே குரல் கொடுப்பதில்லை.
 
இவர்கள் கடுமையான தொழில் புரிவோர் என்பதாலும், வெயிலில் காய்ந்து உடல் கருத்தவர்களாகவும், பொருளாதார ரீதியிலும் பின்னடைவில் உள்ளவர்கள் என்பதாலும், தொடர்ந்தும் அச்சத்திற்குள்ளேயே வாழ்பவர்கள் என்பதாலும், சிங்கள சமூகத்தவரும் ஏனைய பிற சமூகத்தவரும் இவர்களை ஒரு அடிமை வர்க்கமாக பார்ப்பதனையும் பல இடங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
 
இருப்பினும் அன்மையக் காலங்களில் மலையகத் தமிழர்களும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தும் மற்றும் பல்வேறு வணிகங்களில் தம்மை ஈடுபடுத்தி வருவதனாலும் முன்னேற்றமான சூழல் உருவாகி வருகின்றது.
 
==மேற்கோள்கள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/851882" இருந்து மீள்விக்கப்பட்டது