லிசியே நகரின் தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல்
No edit summary
வரிசை 28:
இவரின் ''ஓர் ஆன்மாவின் வரலாறு'' என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|பதினொன்றாம் பயஸ்]] இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.<ref>Guy Gaucher, ''The Spiritual Journey of Therese of Lisieux'', p 211, ISBN 0-232-51713 4</ref>
 
1927-இல் குழந்தை இயேசுவின் புனித தெரேசா மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக [[பிரான்சிஸ் சவேரியார்|பிரான்சிஸ் சவேரியாருடன்]] அறிவிக்கப்பட்டார். 1944-இல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக [[ஜோன் ஆஃப் ஆர்க்|ஜோன் ஆஃப் ஆர்கோடு]] அறிவிக்கப்பட்டார். 19 அக்டோபர் 1997-இல் [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33-ஆம் மறைவல்லுநராக அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார். (மற்ற இரு பெண் மறைவல்லுநர்கள் [[அவிலாவின் புனித தெரேசா|அவிலா நகர் தெரேசா]], மற்றும் [[சியன்னா நகர கத்ரீன்|சீயேனா நகர் காதரின்]] ஆவர்).
 
குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது<ref>''Thérèse of Lisieux: God's gentle warrior'' by Thomas R. Nevin, 2006 ISBN 0-19-530721-6 page 26</ref>.
"https://ta.wikipedia.org/wiki/லிசியே_நகரின்_தெரேசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது