"பேச்சு:மலையகத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,217 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* "மலையகத்தமிழர்" என்போர் இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து கூலித் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டுமே குறிக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில், போதிய கல்வி பெறமுடியாத அரசியல் அழுத்தங்களின் கீழ் வாழ்பவர்கள்.
 
* "இலங்கையின் இந்தியத் தமிழர்" எனும் போது மலையகத் தமிழரரும் உள்ளடங்கும். அதேவேளை இலங்கை முழுதும் பகிர்ந்தளிக்கப்படும் (இறக்குமதி செய்து) பிடவை தொகை வணிகத்தில் (All sale) முன்னனியில் இருப்பவர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால், பிடவை கடைகளைப் பொருத்தமட்டில் 2000 ஆண்டுக்கு முன்பு வரை, இலங்கையில் பிரசித்திப் பெற்ற கடைகளாக கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள "(ரஞ்ஞனாஸ், லலிதா, போன்ற) கடைகளுக்கு இணையாக எந்த கடைகளும் இலங்கையில் இருக்கவில்லை. இவை இந்தியத் தமிழர்கள் உடையதே.
 
தவிர (தங்கம்) நகை வணிகத்தில் இன்றளவும் இந்தியத் தமிழர் அளவுக்கு இலங்கையில் எவரும் கோளோச்சவில்லை. கொழும்பு செட்டியார் தெருவில் இருக்கும் பாரிய நகைக்கடைகளில் உரிமையாளர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இவை தவிர இன்னும் பல்வேறு மட்டங்களிலும் உயர் நிலையில் இந்திய வம்சாவளி தமிழர் உள்ளனர். இவர்கள் எல்லோரையும் மலையகத் தமிழர் என்று கூறமுடியாது. --[[பயனர்:HK Arun|HK Arun]] 04:17, 24 ஆகத்து 2011 (UTC)
 
* '''ஆய்வுக்குரியவை'''
இன்று இலங்கைத் தமிழர் என அழைக்கப்படுவோரும் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எனும் கோட்பாடு உள்ளோரும் உளர். அவ்வாறாயின் '''நாமும் இந்த பகுப்புக்குள் வந்துவிடும்''' வாய்ப்பு உள்ளது. அல்லது தென்னிந்திய தமிழர்களின் ஆக்கிரமிப்பின் போது அவர்களுடன், இலங்கையில் வாழ்ந்த பூர்வ குடிகள், மொழி, சமயம் எனும் ஒருங்கிணைவால் உருவான இனமாகவும் இருக்கலாம். இவை ஆய்வுக்குறியவை.--[[பயனர்:HK Arun|HK Arun]] 04:39, 24 ஆகத்து 2011 (UTC)
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/852110" இருந்து மீள்விக்கப்பட்டது