"பேச்சு:மலையகத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

629 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
* "இலங்கையின் இந்தியத் தமிழர்" எனும் போது மலையகத் தமிழரரும் உள்ளடங்கும். அதேவேளை இலங்கை முழுதும் பகிர்ந்தளிக்கப்படும் (இறக்குமதி) பிடவை தொகை வணிகத்தில் (All sale) முன்னனியில் இருப்பவர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால், பிடவை கடைகளைப் பொருத்தமட்டில் 2000 ஆண்டுக்கு முன்பு வரை, இலங்கையில் பிரசித்திப் பெற்ற கடைகளாக கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள (ரஞ்ஞனாஸ், லலிதா, போன்ற) கடைகளுக்கு இணையாக எந்த கடைகளும் இருக்கவில்லை. இவை இந்தியத் தமிழர்கள் உடையதே.
 
தவிர (தங்கம்) நகை வணிகத்தில் இன்றளவும் இந்தியத் தமிழர் அளவுக்கு இலங்கையில் எவரும் கோளோச்சவில்லை. கொழும்பு செட்டியார் தெருவில் இருக்கும் பாரிய நகைக்கடைகளில் உரிமையாளர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இவை தவிர இன்னும் பல்வேறு மட்டங்களிலும் உயர் நிலையில் இந்திய வம்சாவளி தமிழர் உள்ளனர். முத்தையா முரளிதரன் போன்றோரும் கண்டி நகரில் வணிகர்களாக இருக்கும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒருவரே ஆவார். இவர்கள் எல்லோரையும் மலையகத் தமிழர் என்று கூறமுடியாது. எனவே கட்டுரையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும். தலைப்பு "இலங்கையின் இந்தியத் தமிழர்" என இட்டுவிட்டு, "மலையதத் தோட்டத்தொழிலாளர்கள்" குறித்து மட்டும் செல்கிறது! --[[பயனர்:HK Arun|HK Arun]] 04:17, 24 ஆகத்து 2011 (UTC)
 
* '''ஆய்வுக்குரியவை'''
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/852128" இருந்து மீள்விக்கப்பட்டது