கோபுரம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Gopuram-madurai.jpg|thumb|200px|[[மதுரை|மதுரையில்]] உள்ள ஒரு கோபுரம்]]
'''கோபுரம்''' என்பது தற்போதைய பரவலான வழக்கில் இந்துக் கோயில்களின் நுழை வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிக்கும். பல்வேறு அளவுகளிலும் காணப்படும் இக் கோபுரங்கள், தென்னிந்திய மாநிலமான [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலேயே]] அவற்றின் உச்ச வளர்ச்சியைப் பெற்றுக் காணப்படுகின்றன. ஒரு [[பட்டைக்கூம்பு]] (பிரமிட்) போல் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் இந்த அமைப்பு, ஒன்றிமேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட தளங்களாகக் காட்சி தருகின்றன. ஒரு தளம் கொண்டவை முதல் 12 தளங்கள் கொண்ட கோபுரங்கள் வரை தமிழ் நாட்டில் உள்ளன. இது போலவே ஒரு [[இந்துக் கோயில்|கோயிலில்]] இருக்கக்கூடிய கோபுரங்களின் எண்ணிக்கையும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒரேயொரு கோபுரத்தைக் கொண்ட கோயில்களும், 16 கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/கோபுரம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது