டைகிரிசு ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 90:
டைகிரிசு ஆறு 1,850 கிமீ நீளமானது. இது கிழக்குத் துருக்கியில், இலாசிக் என்னும் நகரத்தில் இருந்து, 25 கிமீ தென்கிழக்கே டோரசு மலையில் உற்பத்தியாகிறது. இவ்விடம் இயூபிரட்டீசு ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. டைகிரிசு ஆற்றின் முதல் 400 கிமீ துருக்கியின் எல்லைகளுக்குள் அடங்குகிறது. துருக்கியின் எல்லைக்கு அப்பால் அடுத்த 44 கிமீ தூரம் இவ்வாறு [[சிரியா]], ஈராக் ஆகிய நாடுகளின் எல்லையாக அமைகிறது. சிரியாவுக்குள் இருக்கும் டைகிரிசு ஆற்றின் பகுதி இந்த 44 கிமீ மட்டுமே. இதன் எஞ்சிய 1,418 கிமீ நீளப் பகுதி முற்றிலுமாக ஈராக்கினுள்ளேயே ஓடுகிறது.
 
டைகிரிசு ஆறு, பாசுரா நகருக்கு அண்மையில் இயூபிரட்டீசு ஆற்றுடன் இணைகின்றது. இவ்விடத்தில் இருந்து பாரசீகக் குடாவை நோக்கிச் செல்லும் இணைந்த ஆறு சாட்-அல்-அராப் என அழைக்கப்படுகிறது. பிளினியும்[[பிளினி]]யும், வேறு பல பண்டைய வரலாற்றாளர்களினதும்வரலாற்றாளர்களும் கூற்றுப்படிகுறிப்பிட்டுள்ளபடி ஒரு காலத்தில் [[இயூபிரட்டீசு ஆறு]] டைகிரிசுக்குப் புறம்பாகத் தனியாகவே கடலில் கலந்ததாகத் தெரிகிறது.
 
ஈராக்கின் தலைநகரமான [[பாக்தாத்]], டைகிரிசு ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது. துறைமுக நகரான [[பாசுரா]] (Basra) சாட்-அல்-அராபின் இரு கரைகளிலும் அமைந்துள்ளது. [[மெசொப்பொத்தேமியா]] நாகரிகக் காலத்தில் செழித்திருந்த நகரங்கள் பல இந்த ஆற்றின் கரையில் அல்லது அதற்கு அண்மையிலேயே காணப்பட்டன. இந் நகரங்களுக்குத் தேவையான நீரும், இவற்றைத் தாங்குவதற்கான உணவு உற்பத்திக்கான நீர்ப்பாசனத்துக்குத் தேவையான நீரும் இவ்வாற்றிலிருந்து பெறப்பட்டது. [[நினேவே]], [[டெசிபொன்]], [[செலியுசியா]] என்பன இந்த ஆற்றின் கரையில் அமைந்த முக்கியமான நகரங்கள். லாகாசு என்னும் நகரத்துக்குத் தேவையான பாசன நீர் கிமு 2400 இல் வெட்டப்பட்ட கால்வாய் ஒன்றின் மூலம் டைகிரிசு ஆற்றில் இருந்தே பெறப்பட்டது. ஈராக்கின் முன்னாள் அதிபர் [[சதாம் உசேன்]] பிறந்த நகரான [[திக்கிரிட்]]டும் இதே ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது. இந்த நகரத்தின் பெயரும், ஆற்றின் பெயரில் இருந்தே பெறப்பட்டது.
 
==போக்குவரத்து==
பெரும்பாலும் பாலைவனமாக உள்ள ஒரு நாட்டில், நீண்ட காலமாகவே டைகிரிசு ஒரு முக்கியமான போக்குவரத்துப் பாதையாகச் செயல்பட்டது. ஆழமில்லாத அடிப்பாகத்தைக் கொண்ட கப்பல்கள் பாக்தாத் வரை செல்ல முடியும். மேலும் தட்டைப் படகுகளில் ஆற்றின் திசைக்கு எதிராக மோசுல் வரை செல்லலாம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆற்றோட்டத்துக்கு எதிராகச் செல்வதற்கு நீராவிப் படகுகளைப் பயன்படுத்தினர். பிரித்தானியர் ஓட்டோமான் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றியபோது, படையினரின் தேவைகளை வழங்குவதற்கு இவ்வழி பயன்பட்டது.
 
 
20 ஆம் நூற்றாண்டில், திட்டமிடப்பட்டு முடிவுறாத பெர்லின்-பாக்தாத் தொடர்வண்டிப் பாதையின் ஒரு பகுதியாகிய பாசுரா-பாக்தாத்-மோசுல் தொடர்வண்டிப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது. பெருமளவிலான சரக்குப் போக்குவரத்து இதனூடாக இடம்பெறத் தொடங்கியபோது ஆற்றுப் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகம் வீழ்ச்சியடைந்தது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/டைகிரிசு_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது