ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''ஈலம்''' (Elam) இன்றைய தென் மேற்கு [[ஈரான்|ஈரானில்]] செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, [[குசெசுத்தான்]], [[ஈலம் மாகாணம்]] ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து [[கெர்மான் மாகாணம்|கெர்மான் மாகாணத்தில்]] உள்ள சிரோஃப்ட் (Jiroft), எரிந்த நகரமான [[சபோல்]] (Zabol) என்னும் இடங்கள் வரை பரந்திருந்ததுடன், தென் [[ஈராக்]]கின் சிறிய பகுதியொன்றையும் உள்ளடக்கி இருந்தது.
 
பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. [[நடு வெண்கலக் காலம்|நடு வெண்கலக் கால]] ஈலம் [[அன்சான்|அன்சானை]] (Anshan) மையமாகக் கொண்டு [[ஈரானியச் சமவெளி]]யிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த [[சூசா (ஈரான்)|சூசா]]வை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது. இதன் பண்பாடு, [[குட்டியப் பேரரசு|குட்டியப் பேரரசில்]], சிறப்பாக [[ஆக்கிமெனிட் வம்சம்|ஆக்கிமெனிட் வம்சக்]] காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் [[ஈலமியஈல மொழி]] பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.
 
[[ஈலமியஈல மொழி]]க்குப் பிற எந்த மொழிகளுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. [[சுமேரிய மொழி]]யைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், [[ஈலமோஈல-திராவிடம்]] என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்
 
==வரலாறு==
ஈலத்தின் வரலாறு துண்டு துண்டாகவே கிடைக்கிறது. சுமேரிய, அக்காடிய, பபிலோனிய மூலங்களில் இருந்தே பெரும்பாலும் இதன் வரலாறு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. இரண்டு ஆயிரவாண்டுகளை உள்ளடக்கிய ஈலத்தின் வரலாறு வழக்கமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்தக் காலப் பகுதிகளுக்கும் முன்னுள்ள காலம், முதனிலை ஈலக் காலம் எனப்படுகிறது.
* முதனிலை ஈலக் காலம்: கிமு 3200 - கிமு 2700
* பழைய ஈலக் காலம்: கிமு 2700 - கிமு 1600
* நடு ஈலக் காலம்: கிமு 1500 - கிமு 1100
* புதிய ஈலக் காலம்: கிமு 1100 - கிமு 539
 
[[ஈலமிய மொழி]]க்குப் பிற எந்த மொழிகளுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. [[சுமேரிய மொழி]]யைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், [[ஈலமோ-திராவிடம்]] என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஈலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது